Monday, 5 October 2015

‘குடி குடியைக் கெடுக்கும்!’ என்று ‘பிழையில்லாமல் அச்சடிப்போம்!’ - முனைவர் கரு.முருகன்

‘குடி குடியைக் கெடுக்கும்!’ என்று
‘பிழையில்லாமல் அச்சடிப்போம்!’
-    முனைவர் கரு.முருகன்

உலக மானுட சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழனுடைய பண்பாடுää நாகரீகம்ää கலாச்சாரம் இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல சமீபத்திய நிகழ்வுகளான மூன்று வயது குழந்தைக்கு மதுபுகட்டலும்ää பதின்மவயது மாணவியின் மதுத் தாண்டவமும் நம்முடைய பண்பாட்டுச் சீரழிவை உலகிற்கு உணர்த்தத் தொடங்கி விட்டன. நம்முடைய கலாச்சாரம் எல்லாம் தேர்விற்கு எழுதும் ‘வினா-விடைக் குறிப்புக்களாகவே’ நாம் பார்க்கிறோமே தவிர நம்முடைய வாழ்வியல் என்பதனை மறந்து போய் இருக்கிறோம்.
    மழலைக்கு மதுவை புகட்டியதோடுää அதில் தொழில் நுட்ப வசதி நுணுக்கங்களை புகுத்தி ரசிப்பதைத் தினசரி வழக்கத்துள் இவையும் ஒன்று என வாழ கற்றுக் கொண்டு விட்டோம். மதுவை தொடுவதே தவறு என்கிற சமூகப் பண்பாட்டை இளையோர் சமூகத்திற்கு புத்தி புகட்ட கல்வி வழியிலும் மறந்து போய்விட்டோம். ஆட்சி மாறுகின்ற பொழுது ஆட்சியாளர்களின் தலைவர்களைப் பாடப்புத்தகத்தில் பதிப்புரிமை செய்யவே முன்னுரிமை தந்து சமூகப் பண்பாட்டுக் கல்வியினை பதிப்பு செய்ய பக்கங்களுக்கு இடம் தராமலே போய்விட்டார்கள். பள்ளி மாணவி மது அருந்தியதை படங்களுடன் கூடிய வசதிகளை நாம் தகவல் பகிர்வு பொருளாகவே பதிவு செய்ய அலைகிறோம். மாணவி ஒருவர் மட்டும் என இவற்றை புறம் தள்ளி விட முடியாது. காலையில் பள்ளிக்கோää கல்லூரிக்கோ செல்வதாகச் சொல்லிவிட்டு ஊரில் ஒதுக்குப்புற மரத்தடியிலும்ää மதுக்கடைகளிலும் மயக்கமாய் மாலை நான்கு மணி வரை காத்துக் கிடக்கும் பெரும்பாலான மாணவர் சமூகத்தின் வாழ்வினை பெற்றோர் மட்டும் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமா? என்கிற கேள்விக் கணைகள் மனதை பாரமாய் அழுத்துகிறது. ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன்; தோன்றிய மூத்தகுடி’ என்கிற வரிகளை மாணவ இளையோர் தவறாக பொருள் புரிந்துக் கொண்டனரோ? என்கிற பொருளைத் தற்கால நிகழ்வுகள் வழியாக தந்து கொண்டிருக்கின்றன. உலக இலக்கியத்திற்கு அறவழி இலக்கியம் அமைத்த வள்ளுவப் பெருந்தகைää தன் பணத்தை கொடுத்து தனக்கே ஊறு செய்யும் மதுவினை 
    “கையறி யாமை யுடைத்தே பொருள்கெடுத்து
    மெய்யறி யாமை கொளல்”. (குறள்: 925) 
என குறளாலும் சாடுகிறார். உலகப் பொதுமறை தந்த வள்ளுவன் 133 அதிகாரங்களுள் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தில் மதுவின் தீமையினை விளக்கி உலக இலக்கியத்துள் மது ஒழிப்பினையும்ää நல்லொழுக்க இலக்கியமாக மாற்றி அமைத்தார். எதையும் மன்னிக்கும் குணம் கொண்டவள் அன்னை. அந்த அன்னை கூட மன்னிக்க மாட்டாள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல்ää மன்னிக்கக்கூடாது என உத்தரவினை உலகிற்கு அறிவிக்கின்றார்.  நாகரீகத்தால் பண்பட்டு வாழ்ந்த தமிழ்ச் சமூக இளையோர் மது ஒரு நாகரீக கலாச்சாரம் என நாணிக்குனியும் நாகரீகத்தில் ஆட்பட்டுக் கொண்டனர்.
மதுவினை ஒழிப்பதற்காக தன் உயிரை தியாகம் செய்யும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகச் செம்மொழிகளில் தமிழ் முதன்மையானது என உலகிற்கு அறிவுறுத்துவதற்கு நம்முடைய பண்பாடும்ää கலாச்சாரமும் அடிப்படைக் கூறுகள் ஆகும்.     ஆனால்ää மது என்கிற மாயைக் கலாச்சாரத்தால் ஆண்மைக்குறைவுää நரம்புத்தளர்ச்சிää கணைய அலர்ஜிää குடற்புண்ää இருதய நோய்
உழவுத் தொழிலே நாகரீகத்திற்கு அடிப்படை ஆகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மண்ணைத் திருத்திய மனிதன் தானும் திருந்தினான். தான் வாழ்ந்த இடத்தை திருத்திய மனிதன் நகரமாக்கினான்ää நாகரீகத்தை பண்பாடு சிதையாமல் வடிவமைத்தான். இன்றளவிலும் கிராம வழக்காற்றுச் சொல்லாக இருக்கிறää ‘அவருக்கு நிலபுலம் இருக்கிறதா?’ என்கிற சொல் பல்வேறு பொருளை தாங்கி இருக்கிறது. நிலம் என்பதன் பொருள் அனைவருக்கும் தெரியும். புலம் என்பது நிலத்தையும் குறிக்கும் (வருவாய்த்துறை நிலஅளவேடுகளில் புலஎண் என இன்றும் குறிக்கப்படுகிறது) உள்ளத்தையும் குறிக்கும். நிலத்தில் விளையும் பயிருக்கு இடையே களைகள் வளர்வது இயற்கையே. அந்த களையினை பயிர் நன்றாக வளர்ந்து பலன் தர வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் வளரää வளர அந்த களையினை அகற்றி எறிய வேண்டும். இதனை ஆங்கிலத்தில் உரடவiஎயவநன டயனெஇ ரnஉரடவiஎயவநன டயனெ என்பர். திருத்தம் பெற்ற உள்ளமும்ää நிலமும் வளர்ச்சி அடையும். ஒரு மனிதன் செல்வத்தை மட்டும் வைத்து (பண்டைய காலத்தில் நிலத்தின் அடிப்படையிலேயே செல்வந்தர் நிர்ணயிக்கப்பட்டனர்.) தமிழ்ச்; சமூகம் மனிதனாக ஏற்றுக் கொண்டது இல்லை. புலம் என்கிற உள்ளத்தில் பண்பாடுää கலாச்சாரம் சார்ந்த சமூக வெளிப்பாட்டினை வைத்தே முடிவு செய்தனர். பண்பாடுää நாகரீகம் என்கிற சொல் உள்ளச் செம்மையை சுட்டுகிறது.
பண்பெனப்படுவது எது? என்ற வினாவிற்கு கலித்தொகையில் ‘பாடறிந்து ஒழுகலாகும்’ என வரையறை செய்கிறது. அதாவது பிறர் மனம் புண்படாதவாறு தனது வாழ்வினை அமைக்க வேண்டும் என்கிறது. ஆனால் பிறர் மனம் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் பெற்றோருடைய மனமாவது புண்படாத வகையில் கல்வி பயிலும் இளையோர் சமூகம் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் மாணவனின் புற வளர்ச்சியை மட்டுமே பெருமையாக பேசி மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டும்; சந்தோஷம் அடைவதையே மாதஊதியமாக எடுத்து கொள்ளக் கூடாது. மாணவனுடைய அகவளர்ச்சியினை பெற்றோர்கள் மதிப்பெண்ணாக கருதவேண்டும். ஆசிரியர் தரும் வினா-விடை மதிப்பெண்ணைää அக வளர்ச்சி மதிப்பெண்ணுக்கு அடுத்த நிலையில் வைக்கவேண்டும். அக வளர்ச்சிதான் பண்பாட்டின் ஆணி வேர் ஆகும். மாத்யூ அர்னால்டு என்கிற மேலைநாட்டு அறிஞர்ää “ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும்ää தன்னை சூழ்ந்துள்ள சமுதாயத்தின் நலன்களை பேணுவதிலும் பேரவாக் கொண்டிருக்கும் நிலை பண்பாடு” என்கிறார்;. இந்த பண்பாட்டின் வழியாக தான் அறிவுää கல்விää ஆன்மீகம்ää சமூக வளர்ச்சி உள்ளிட்ட எல்லாம் அமையப் பெறுகின்றன.
    இன்றைய நாகரீக உலகில் தமிழரின் பண்பாடுää நாகரீகம்ää கலாச்சாரம் எல்லாம்  சங்க காலத்து எச்ச பொருளாகவும்ää அதன் மீது மேலைநாட்டு மோகம் விரவியும் பரவியும் விஷமாய் சங்கமித்துக் கொண்டிருக்கின்றன. அரசு மற்றும் அதை சார்ந்த துறைகளும்ää மக்கள் கடவுளாய் மதிக்கின்ற நீதிமன்றங்களும் இவ்விசயங்களை ஏன் பொது நல வழக்குகளாக எடுக்க மறுக்கின்றன? மனமும்ää பணமும் இருந்தால்; தண்டனை பெற்ற ஒருசிலர் ஒரே நாளில் பிணையத்தில் வெளியில் வர வாய்ப்புக்கள் இருக்கின்ற பொழுதுää இது போன்ற சமூகப் பிரச்;சனைகள் பொதுநல வழக்காக மன்றத்திற்கு வராமலே விவாதப்பொருளாக மட்டுமே இருக்கின்றன.
அரசாங்கத்தின் நிதி நிலைமைக்கு மதுக்கடைகளின் வருமானமும் ஒரு காரணம் என்கிற வாதத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமணம் என்றால் மாப்பிள்ளைக்கு கடிகாரமும் மோதிரமும் போட வேண்டும் என்ற நிர்பந்த பேச்சுக்கள் இருந்தன. செல்போன் வந்த பிறகு கடிகாரம் கேட்கவுமில்லை கையில் கட்டவும் பெரும்பாலானோர் மறந்து போனார்கள். செல்போன் வந்ததால் மனக்கணக்கும் மறந்து கால்குலேட்டர் காணாமலே போய்விட்டது. அதேபோல் மதுக்கடை வருமானத்தை கவனத்தில் கொள்ளாமல் மதுக்கடைகளை மூடி விட்டு கடுமையான சட்டங்களால் இளையோரை மதுவை நாட விடாமல் குறிப்பாக கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நல்வழிபடுத்த  ஏன் மாற்றுவழி வருமானத்தை பெருக்க யோசிக்க மறப்பது ஏன்?.  
கட்டணம் அதிகமாக செலுத்தி பிள்ளையை படிக்க வைத்தால் தான் உயர்ந்த கல்வியாக (உயர்குடிக் கல்வி) அல்லது உயர்கல்வியாக பெருமைகொள்ளும் பெற்றோரை தமிழ்; கூறும் நல்லுலகம் வறுமைக்கோடு இல்லாமல் அதிகமாகவே பெற்றுள்ளதால் இதுபோன்ற சமூகத் தொழுநோய்; கவனிப்பாரற்று இருக்கிறது. இதனைக் காரணம் காட்டி சமூகச் சிந்தனையாளர்கள் ஒதுங்கியும் விலகியும் இருத்தல் கூடாது. பழைய பென்சன் முறையை ரத்து செய்து விட்டுää புதிய பென்சனை அரசு இயந்திரம் கொண்டு வந்த பொழுது ‘போராட்டம்’ என்கிற கோஷங்களோடு புதிய பென்சன் திட்டத்தை ஏற்றுகொண்டது போல மதுக்கடையை திறப்போம்! ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்கிற வாசகத்தை பிழையில்லாமல் மதுபாட்டில்களில் அச்சடிப்போம்’ என்கிற அரசு மதுஒழிக்கும் ஆர்வம் மட்டும் போதாது.
தமிழர் வாழ்வியலில் காதல்ää வீரம்ää இல்லறம்ää துறவறம்ää நட்புää செய்நன்றிää புகழ்ää மானம்ää ஈகைää கண்ணோட்டம்ää ஒப்புரவு ஆகிய கோட்பாடுகள் தமிழனுக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாக இருந்தன. ஆனால் பண்பாடு துறந்த மதுவால் மயக்கமுற்ற இளையோர் சமூகத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பெற்றோர்ää அரசுநிர்வாகம்ää நீதிமன்றங்கள் (எத்தனையோ நல்ல விசயங்களுக்கு பொதுநல வழக்காக கருதி தாமே முன்வந்து வழக்காக பதிவு செய்து தீர்ப்புக்கள் வழங்கியிருப்பதை அனைவரும் அறிந்ததே)ää சமூகநல ஆர்வலர்கள் இன்னும் அமைதிகாப்பது ஏனோ புரியவில்லை. உலக இளையோர் மனிதவளம் இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது என பல்வேறு நாடுகளில் கணக்கெடுப்புக்கள் வரையறை செய்கிறது. ஆனால் இளையோர் மனித வளத்தை மதுவால் மாய்த்துக் கொண்டிருக்கிறோம். பிறப்பு முதல் தொடங்கி இறப்பு வரை மதுவில்லா விருந்து இல்லை என தமிழ் சமூகம் தற்பொழுது ஏற்றுக் கொள்ள ஆரம்பி;த்துவிட்டது. பண்பாடு என்னும் தாய்பாலினை புகுட்டாமல்ää மது என்கிற புட்டிப்பாலை புகட்டி கொண்டிருக்கிறோம்.
தமிழ் மொழி தொடங்கிய காலத்தினையும்ää அது பண்பாடோடு வளர்ந்த விதத்தினையும் ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் பண்பாட்டு மன்றங்களாக செயல்பட ஆக்கம் தரவேண்டும். பள்ளிää கல்லூரிகளில் நடைபெறும் கலை விழாக்களில் ஆடம்பரம்ää ஆடை குறைப்பு இல்லாத சமூகப்பண்பாட்டு விழாக்களாக அமையப்பெற வேண்டும். பேச்சுää கட்டுரைää கவிதை இவைபோன்ற இலக்கிப் போட்டிகளில் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக பங்குபெற வேண்டும் என்கிற நிலையில் போட்டி தேர்விற்காக அல்லாமல் பண்பாட்டு மாறுதலுக்காக நடத்தப்பட வேண்டும்.     

முனைவர் கரு.முருகன்ää (தலைவர் 2014-15ää ரோட்டரி சங்கம்ää தேவகோட்டை)
உதவிப்பேராசிரியர்ää
தமிழ் உயராய்வுமையம்ää
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிää
தேவகோட்டை 630 303.
சிவகங்கை மாவட்டம்.
தொடர்புக்கு அலைபேசி எண்: 94434 66564
மின்னஞ்சல்: prof.karumurugan@gmail.com

சிலம்பில் முத்தமிழ்க் கோட்பாடுகள் - முனைவர் கரு.முருகன்

சிலம்பில் முத்தமிழ்க் கோட்பாடுகள்
                - முனைவர் கரு.முருகன்
    நம் தமிழ் மரபில் முத்தமிழ் என்ற வழக்கு தொன்மை காலந்தொட்டே இருந்து வருகிறது. உள்ளக்கருத்தினை உணர்த்தும் மொழி இயற்றமிழ் என்றும்ää இன்பம் கொள்ளத்தக்க இசையும் மொழி இசைத்தமிழ் என்றும்ää உடலின் இயக்கத்தால் விளக்கப்படும் மொழி நாடகத்தமிழ் என்றும்ää ‘முத்தமிழ்க் கோட்பாடு’ அறிவுறுத்துகிறது. இயற்றமிழ்ää இசைத்தமிழ்ää நாடகத்தமிழ் ஆகிய மூன்றையும் இணையான கூறுகளாக முத்தமிழ் என்ற கருத்துக்கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கிறது. முத்தமிழ் கோட்பாடு பற்றிய செய்தியினைää
    “தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னட் பொருப்பன்”
                                (பரிபாடல் திர.4)
    என்னும் பாடல்வரி மூலம் அறியலாம். மகாகவி பாரதி யாமறிந்த புலவர் என வரையறை செய்து வள்ளுவன்ää கம்பர்ää இளங்கோ எனத் தமிழ் கூறும் நல்லிசைத்துச் சுட்டிக் காட்டியுள்ளார். வள்ளுவம் என்பது வாழ்வின் இலக்கணம். கம்பரது காப்பியம் வாழ்க்கை இலக்கியம். இளங்கோவின் சிலம்பு தமிழரின் அடையாளம்.மொழியின் வளமை. காளிதாசரின் கவிப்புலமையும்ää தாந்தேயின் காதல் சுவையும்ää N~க்ஸ்பியரின் நாடகப்புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற முத்தமிழ் செவ்வியல் காப்பியமாகும்;.  சங்க காலத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இக்கோட்பாடு காணப்படுகிறது. 
இயற்றமிழ்:
    இயற்றமிழ் என்பது அனைத்துத் துறையிலும் இயலுகின்றதும்ää இயக்க வைப்பதும் ஆகும். உலக வழக்குää செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும்ää செய்யுளுமாகிய நூல்களின் தொகுதி. வழக்கியலும்ää வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளிலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் என்பர் பேராசிரியர். இயற்றமிழில் இலக்கணம்ää இலக்கியம்ää செய்யுள்ää உரைகள்ää உரைநடைää புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும்.
    இயற்றமிழில் பல புதிய கவிதை வடிவங்களைத் தோற்றுவித்தவர் இளங்கோவடிகள்.  நிலைமண்டில ஆசிரியப்பாää மயங்கிசைக் கொச்சகக் கலிää கலிவெண்பாட்டுää பஃறாழிசைக் கொச்சகக் கலிää அயல் மயங்கிசைக் கொச்சகக் கலி முதலான பாவகைகள் சிலம்பில் இடம்பெற்று காப்பியத்திற்கு அழகூட்டுகிறது. இவற்றில் உவமைää உருவகம்ää தற்குறிப்பேற்ற அணிநலன்களும்ää கற்பனைää ஓசைää வருணனை ஆகிய இலக்கிய நலன்களும் நிறைந்துள்ளன. மாந்தர்களின் பழங்காலப் பாடல்களை நாட்டுப்புற வடிவிலேயே தம் நூலில் எடுத்து கையாண்டுள்ளார். இத்தகைய நாட்டுப்புறப் பாடல்களில் கானல்வரிää வேட்டுவவரிää ஆய்ச்சியர் குரவைää குன்றக்குரவை ஆகிய நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.    
    தமிழில் உள்ள ஓசை வகைகள் அகவலே முந்தியது. அகவலும்ää செப்பலும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே அமைந்துள்ளன. ஆகையால் செய்யுளைத்தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பர். இயல்கள் தோன்றிய காலத்தில் செய்யுளுக்கும்ää உரைநடைக்கும் பெரிதும் வேறுபாடு இல்லை. செய்யுளைப்போலவே உரைநடையும் செப்பமாக செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் உரையினை தொல்காப்பியர் செய்யுள் வகையுள் ஒன்றாக கூறியுள்ளார். சொல் ஆளுமை என்பது இலக்கியக் கட்டமைப்பில் இயலாகப் பகுக்கப்படுகிறது. தூய சமணப் பெருந்துறவி கவுந்தியடிகளுக்கும்ää கோவலனுக்கும் நடைபெற்ற உரையாடலில் ‘மதுர தென்தமிழ் நாட்டின் புன்னிய நகரம் எனவும்ää மாசற்ற கல்வி கேள்விகளில் சிறந்த பெரியார் இருக்கின்றார்’ என்ற வரிகளால் உரை முடிகிறது. அக்கள்வனைக் கொண்டுää அச்சிலம்பினை கொண்டு வா என விளம்பியதாகää கோவலனை அவைக்கு கொண்டு வரச்சொன்னதைää மாறுதலாக பொருள் உணர்ந்ததால் காப்பியம் அமையக் காரணமாக இருந்தது.

சிலம்பில் உரைநடை
    தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பதிகத்தில்
        “ வாழ்த்து வரந்தரு காதையொடு
        இவ்வா றைந்தும்
        உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்”.
    என்ற குறிப்பு வருகிறது.
    இக்காப்பியத்தின் இடையிடையே உரைநடை இடம்பெற்றுள்ளது. தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. உரைநடை இரண்டு காரணங்களுக்காக இளங்கோவடிகள் பயன்படுத்தி இருக்கிறார்.

அவை
    1. கதை நிகழ்ச்சிகளை இணைப்பதற்காகää
    2. கதை நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டுவதற்காகää
    சிலப்பதிகாரத்தில் வந்துள்ள இசைத்தமிழ்ää நாடகத்தமிழ் பகுதிகளில் உரைப்பகுதி வருவதால் முற்காலத்தில் இசைää நாடகத் தமிழிலேயே உரைநடை முதன்முதலாக கையாளப்பட்டு இருக்கிறது. கட்டுரைக்காதை என்பதை ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும்ää நூலின் இறுதியிலும் காண்கிறோம்.
        “ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம்
        முற்றிற்று
        செங்குட்டுவனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
        வஞ்சிக்காண்டம் முற்றிற்று”.
    இவற்றைக் காணும் போது உரைநடை போலவே காணப்படுகின்றன. தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தை அறிய முடிகிறது. மேலும் இசை நாடகத் தமிழில்;தான் உரைநடை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
        “ அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்:
        வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்:
        குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
        இரவிடைக் கழிதற்குää என் பிழைப்பு அறியாது:
        கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்:
        பொய்தீர் காட்சிப் புரையோய்ää போற்றி”.
    இயற்றமிழ் பற்றி இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
இசைத்தமிழ்
    இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத்தமிழ் ஆகின்றது. இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பதுää வயப்படுத்துவதுää ஆட்கொள்வது என்று பல பொருள்கள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவதுää அசைவிப்பது எனும் பொருளைத் தருகின்றது என்பர் தண்டபாணி தேசிகர். ஏழிசைää ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையே ஏழிசையாக அமைகிறது என்பதைக் காட்டுகிறது.
    தமிழர்களின் இசைக்கு இலக்கண நூலகாக சிலப்பதிகாரம் விளங்குகிறது. சங்க இலக்கியத்தை அடுத்து சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய செய்திகள் அதிக அளவில் காணப்படுகின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளன. இலக்கணத்தை அறிவியல் முறையில் தந்துள்ள இளங்கோவடிகளை இசை இலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.  வாழ்த்துப்பாடல்ää அங்கேற்றுக்காதைää கானல்வரிää வேணிக்காதைää வேட்டுவவரிää ஆய்ச்சியர் குரவைää துன்பமாலைää ஊர் சூழ்வரிää வஞ்சினமாலைää குன்றக்குரவைää வாழ்த்துக்காதைää ஆகியன அக்கால இசைக்கலையைப் பற்றியும்ää இசைப்பாடல் பற்றியும் விளக்குகின்றன.
    “உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயா” எனப் பாடுகின்றபொழுதுää மாணிக்கவாசகப் பெருமான் இசை எங்கு பிறக்கிறது என்றால் இயற்கைää ஆன்மா என்ற இரு நிலைகளில் பிறக்கிறது என்று கூறுகிறார்.
    1. பஞ்சபூதம் (நிலம்ää நீர்ää காற்றுää ஆகாயம்ää நெருப்பு)
    2. தன்மாத்திரை (ஓசைää ஊருää ஒளிää சுவைää நாற்றம்)
    3. அறிபொறிகள் (மெய்ää வாய்ää கண்ää மூக்குää செவி)
    4. வினைபொறிகள் (வாக்குää கைää கால்ää கருவாய்ää எழுவாய்)
    5. உட்கரணம் (மணம்ää புத்திää சித்தம்ää அகங்காரம்)
    என்ற இந்த இயற்கையோடு எழுபத்து இரண்டாயிரம் நரம்புகளை இயக்கச் செய்வதுதான் ஆன்ம இசை.
எண்    சுரம்    எழுத்து    இடம்    தமிழ்பெயர்
1.    ச    ஆ    மிடறு    குரல்
2.    ரி    ஈ    நா    துத்தம்
3.    க    ஊ    அண்ணம்    கைக்கிளை
4.    ம    ஏ    சிரம்    உழை
5.    ப    ஐ    நெற்றி    இளி
6.    த    ஓ    நெஞ்சு    வுpளரி
7.    நி    ஓள    நாசி    தாரம்
    இசையை வெளிப்படுத்தும் விதமாக மாதவி கோட்டுமலர் புனைந்து யாழ் மீட்டுகிறாள். அப்படி தான் மீட்டுகின்ற போது எட்டு வகையில் சோதிக்கிறாள்.
    1. பண்ணல்
    2. பரிவட்டனை - நரம்பினை கரணம் செய்தல்
    3. ஆராய்தல் - சுருதி சேர்த்தல்
    4. தைவரல் - அனுசுருதி இயற்றல்
    5. செலவு - ஆலாபணம்
    6. விளையாட்டு – பாட நினைத்ததை சந்தத்தில் விடுதல்
    7. கையூழ் - வண்ணத்தில் செய்த பாடலை இசைத்தல்
    8. குறும்போக்கு – முடுக்கிசை என வரையறை செய்யப்படுகிறது
இசைக்கருவ10லம்
    சிலப்பதிகாரம் இசைக்குக் கருவூலமாக உள்ளது ஆடல் கலைக்களஞ்சியம். அதன் கதையில் ஒரு முக்கியப் பாத்திரம் மாதவி. ஆடல்ää பாடல் அழகு மூன்றிலும் சிறந்தவள். அவளது அரங்கேற்றம்ää அரங்கேற்றுக்காதை என்ற பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும்ää ஆடலாசிரியன்ää பாடல் ஆசிரியன்ää மத்தளம் கொட்டுவோன்ää யாழ் இசைப்பவன்ää ஆடும் பெண் ஆகியோருக்கு உரிய தகுதிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
     கானல்வரிää வேட்டுவவரி ஆகியவற்றில் நாட்டுப்புற இசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
        “மகரத்தி னொற்றாற் சுருதி விரவும்
        பகருங் குறில்நெடில் பாரித்து – நிகரிலாத்
        தென்னாதெனா வென்று பாடுவரேல் ஆளத்தி
        மன்னாவிச் சொல்லின் வகை”.
    எனும் அடியார்க்கு நல்லார் உரையில் வரும் மேற்கோள் மூலம் அறிய முடிகிறது. மேலும் அரங்கேற்றுக்காதையில் பண்ää திறம்ää தூக்கு ஆகியன குறித்தும் ஏழு சுரங்கள் குறித்தும் பாடல்ää யாழ்ää குழல்ää தண்ணுமை ஆகிய ஆசிரியர்களின் இலக்கணங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.
இசைத்தமிழ் நூல்கள்
    தொல்காப்பியத்தில்  இசை பற்றிய குறிப்புகள் உள்ளன.
அவைää
    1. நால்வகை நிலங்கட்குரிய பண்வகைகள்
    2. பண்களுக்குரிய பெரும்பொழுதும்ää சிறுபொழுதும்ää
    3. பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைää
    4. பாடலின் அமைப்பிற்கும்ää சிறப்பிற்கும் தேவையான எதுகைமோனை முதலிய       தொடை வகைகள்
    5. அம்போதரங்க அமைப்பு
    6. இசை எழுத்துக்களின் மாத்திரை அளவு
    7. தாள நடை வகைகள்
        இசைத்தமிழ் நூல்கள் சங்ககாலத்தில் இருந்தன என்பதை இறையனார் களவியல் உரையின் ஆசிரியர் கூற்று வலியுறுத்துகிறது. எட்டுத்தொகை  நூல்களுள் ஒன்றான பரிபாடலில் இசை தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் ஒவ்வொரு பாடல்களின் கீழும் அப்பாடல்களின் ஆசிரியர் பெயரும்ää அதற்கு இசை அமைத்தவர் பெயரும்ää அதற்குரிய யாழ்ää செந்துறைää தூக்குää வண்ணம் முதலியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிலம்பு காட்டும் இசை
     சிலப்பதிகாரத்தில் இசைநூலால் வகுத்த எட்டு வகையான இசையின் கூறுபாட்டை மாதவி அறிந்து வைத்திருந்த செய்தியை ää
    “ பண்வகையாற் பரிவுதீர்ந்து:
    மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
    பயிர்வண்டின் கிளை போலப் பல்நரம்பின் மிசைப்படர:
    வார்தல்ää வடித்தல்ää உந்தல்ää உறழ்தல்ää
    சீருடன் உருட்டல்ää தெருட்டல்ää அள்ளல்ää
    ஏர்உடைப் பட்டடைää என இசையோர் வகுத்த
    எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
    பட்ட வகைதன் செவியின் ஒர்த்து”. (கட்டுரைக்காதை 9-15).
    வார்த்தல்ää வடித்தல்ää உந்தல்ää உறழ்தல்ää சீருடன் உருட்டல்ää தெருட்டல்ää அள்ளல்ää ஏறுடைப்பட்டடை என இசை நூலால் வகுத்த எட்டுவகையான கூறுபாட்டை இப்பாடல் விளக்குகிறது. மேலும் வேட்டுவவரியில்ää
        “குரவம்ää கோங்கம்ää மலர்ந்தன கொம்பர்மேல்
        அரவ வண்டினம் ஆர்த்து: உடன் யாழ்செய்யும்
        திருவுமாற்குஇளை யாள்திரு முன்றிலே”.
                                (வேட்டுவவரி 7: 9-11)
    வெண்கடம்பும்ää பாதிரியும்ää புன்னையும் மணம் கமலுகின்ற குரவமும்ää கோங்கமும் மலர்ந்துள்ள மரக்கொம்புகளின் மேல் ஒலி செய்யும் வண்டினம் ஆர்த்துää முழங்கி யாழிசை போல இசைக்கின்றன என்று இளங்கோவடிகள் இயற்கையின் ஓசைக்கு யாழிசையை ஒப்புமைப் படுத்தியுள்ளார்.
நாடகம்
    தொன்மம் வாய்ந்த நாட்டுப்புற மக்களின் மெய்ப்பாட்டினால் தோன்றியதே கூத்து. காலப்போக்கில் மாந்தர்களின் மொழி வளர்ச்சி மற்றும் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ப மெய்ப்பாடு நாடகமாக மாறியது. பின் இன்னதுதான் என முன்னோர்களின் வரையரைக்கு உட்படுத்தப்பட்டு நாடகமானது ஒரு முறைமையாக்கப்பட்டது. தமிழர்களின் வாழ்வியலோடு இயைந்து நாடகமானது முத்தமிழ் ஒன்றாகவும் மாற்றம் பெற்றது. ‘நாடகம்’ எனும் சொல் முதன்முதலில் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் பயன்படுத்தியுள்ளார்.
        “நாடக வழக்கினும் உலகியல் வழக்கியும்
        பாடல் சான்ற புலனெறி வழக்கம்”.
                                    (தொல்.அகத்-53)
    இவ்வடிகளில் பயின்று வரும் ‘நாடக வழக்கு’ எனும் சொல் அக்காலத்தைய நாடகக்கலை வடிவத்தினை பிரதிபலிக்கிறää நாடக வடிவங்களை கூத்துää ஆடல் என்ற இரு வகைகளில் கூறுகிறார். இவை முறையே வள்ளிக்கூத்துää முன்தேர்க்குரவைää பின்தேர்க்குரவைää வெறியாடல்ää காந்தள்ää அமலைக்கூத்துää துடிநிலைää சுழல்நிலைக்கூத்துää பிள்ளையாட்டு முதலியன நடத்துக்கலை வடிவங்களாகும்.மேலும்ää தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் நாடகச் சுவைகள் பற்றிய குறிப்புகளைää
        “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
        உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
        நன்னயப் பொருள்கோள் எண்ணருள் குரைத்தே”.
                                        (தொல்-மெய்-27).
இப்பாடல் தெளிவுறுத்துகிறது.
    இவற்றின் மூலம்ää நாடகம் மட்டுமே கண்ணால் காண்பதற்கும்ää செவியால் கேட்பதற்கும் காட்சிக்கலையாக விளங்குகிறது. சிலம்பில் அமைந்த முப்பது காதைகளுள்ää நான்கு காதைகளில் மட்டும் மக்களின் ஆடல்ää பாடல்களைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. அரங்கேற்ற அமைப்பின் மேடையை விளக்கும் பொருட்டு
    ‘ஒரு சாண் மூங்கிலைக் கொணர்ந்து நல்ல வளர்ச்சி பெற்ற ஆளின் பெருவிரல் இருபத்துநான்கு அளவினைக் கொண்ட நீளம் எட்டும்ää அகலம் ஏழும் என வரையறை செய்யப்படுகிறது. இதில் எட்டு அனு சேர்ந்தது ஒரு தேர்த்து ஆகும். எட்டு தேர்த்து ஒரு இம்மி ஆகும். எட்டு இம்மி ஒரு நெல் ஆகும். எட்டு நெல் ஒரு பெருவிரல் ஆகும் என தமிழனின் அறிவியலோடு இணைந்து ஆக்கம் பெருகிறது. ஒருமுக எழுனிää பொருமுக எழுனிää கரந்து வரல் எழுனி என மேடை நாடக திரைச்சீலையின் வகை உணர்த்தப்படுகிறது’.
 அவை
•    கானல்வரிää    
•    வேட்டுவவரிää
•    ஆய்ச்சியர் குரவைää
•    குன்றக்குரவை.
    நாடக மேடையின் அமைப்புää தூணின் நிழல் மூன்று வகையான திரைச்சீலைகள் பற்றிய குறிப்புகளையும் சிலம்பு காட்டுகிறது.       
நாடகத்தமிழ்
    சிலப்பதிகாரத்தில் நாடகக் காப்பியத்திற்கு இன்றியமையாத உறுப்புகள் அனைத்தும் நிறைந்திருக்கின்றன. இதனால் நாடகக்காப்பியம் என்று கூறுவர். இந்நூலில் இன்பியல்ää துன்பியல் நாடகக்கூறுகள் காட்டப்படுகின்றன. பழங்கால நாடகப் பான்மையை அறிய இந்நூல் மிகவும் துணை செய்கிறது.
    இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகளை வரலாற்றாசிரியர்களைப் போன்று வரிசையாகக் கூறாமல் இடத்திற்கும்ää பாத்திரத்திற்கும் ஏற்றார் போல் ஆங்காங்கே மாற்றியமைத்துக் கூறுவதும்ää வழக்குரைக்காதையில் அமைந்துள்ள உரையாடல் போன்ற பகுதிகளும் இதனை ஒரு சிறந்த நாடகக்காப்பியம் எனக் கூறும்படி அமைந்துள்ளது. கானல்வரி இளங்கோவடிகளின் இசை மற்றும் நாடகப் புலமைக்குச் சான்றாகும்.
நாடகக்கூறுகள்
    கண்ணகியின் பிரிவுää அவள் தன் தீயகனவுää கோவலன் கண்ட அஞ்சுவரு கனவுää அவ்விருவரும் காட்டுவழி செலவுää நீதிக்கு முரணான கோவலன் கொலைää தேற்றமுடியாத கண்ணகியின் துயர்ää கோல்கொடிய பாண்டியனின் இறுதிää கண்ணகியின் தனது இடது நிகிலைத் திருகியெறிந்து மதுரையை எரித்தது. கோப்பெருந்தேவியும் பாண்டியனோடு விண்ணகம் புக்கது போன்றவை இக்காப்பியத்தில் காணும் துன்பியல் கூறுகளாகும்.  புகார்க்காண்டம் முழுவதும் ஆங்காங்கே இன்பமே விரவியுள்ளது. துயருழந்தார் இருவரும் தேவர் புடைசூழ வானவூர்தியில் ஊர்ந்து துறக்கம் சென்றனர் என கதை முடிவு இன்பம் தருவதாய் அமைந்துள்ளது.
நாடக உத்திகள்
    மேலைநாட்டு நாடக உத்தியான ‘நாடக அங்கதம்’ துன்பியல் நாடகங்களுக்கு இன்றிமையாததாகும். துன்பியல் நாடகமான சிலம்பிலும் இந்நாடக அங்கதம் இடம் பெற்றிருக்கின்றது. சிலம்பின் தொடக்கத்திலேயே ‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீதறுக’ என்று பெண்கள் கூடி ஆடிப்பாடி வாழ்த்தும்போதே பின்னால் அவர்களின் கைகள் நெகிழப்போவதை முன்னுணர்த்தலாக உணரவைக்கிறார்.
     மேலும்ää தற்குறிப்பேற்ற அணியின் மூலமாகவும் பின்வருவனவற்றை முன்னுணர்த்துகிறார். கோவலனும்ää கண்ணகியும் மதுரைக்குள் நுழையும்போதே கருநெடுங்குவளையும்ää ஆம்பலும்ää கமலலும் கண்ணீர் சிந்திக் காலுற நடுங்குகின்றன் போருழந்து கைகாட்ட எனவரும் பகுதிகள் கோவலனுக்கு வர இருக்கும் பேராபத்தையும்ää அதனால் கண்ணகி அடைய இருக்கும் பெரும் துன்பத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
முரண்சுவை உத்திகள்
    சிலம்பில் இன்பமும்ää துன்பமும்ää நகையும்ää ääஅவலமும் மாறி மாறி அமைந்து முரண் சுவை விளங்கக்காணலாம். அடைக்கலக் காதையை அடுத்து கொலைக்களக் காதையும்ää நாடுகாண் காதையை அடுத்து காடுகாண் காதையும் அமைத்து முரண்சுவையைக் கூட்டுகிறது.    சிலம்பின் தொடக்கத்தில் மங்களவாழ்த்தாகவும்ää முடிவில் அவலமாகவும் அமைந்து முரண்சுவையைத் தருகிறது.
    அந்திமாலை சிறப்புசெய் காதையில்ää மாலையும் காலையும்ää கூடியவரும் பிரிந்தவரும்ää மகிழ்ச்சியும் அழுகையும்ää மாதவியும் கண்ணகியும் என மாறி மாறி முரண்சுவைப் பாங்கு அமைந்து நாடகப் பண்பிணை பெருக்கின்றது.
மாதவி - நாட்டியக்கலை
      நாட்டியக்கலையினை மாதவி நாட்டிய ஆசிரியரிடம் மட்டும் பயிலவில்லை. இசைää தண்ணுமைää குழல்ää யாழ் போன்ற ஆசிரியர்களிடமும் கலையினைக் கற்றுக்கொண்ட செய்தியைää அவள் அரங்கேறியபோது இசைப்பவர்கள் எந்த இடத்தில் மேடையில் நிற்கவேண்டும் என்பதனைää
        “கூடிய குயிலுவக் கருவிக எல்லாம்
        குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
        தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
        பின்வழி நின்றது முழவே முழவொடு
        கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை”.
                (புகார்காண்டம்ääஅரங்கேற்றுக்காதைää வரிகள் 139-142)
    கூறப்படுகிறது.
    அரங்கேற்றுக்காதைää இந்திரவிழவு ஊரெடுத்தக் காதைää கடலாடு காதை ஆகியவற்றில் ஆடல் கலையின் நுணுக்கம் மற்றும் வகைகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும்ää கடலாடு காதையில் பதினொரு வகையான ஆடல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை
    கொடுகொட்டி     -    இறைவன் கை கொட்டி ஆடும் ஆடல்
    பாண்டரங்கம்        -    இறைவன் வெண்ணீறு அணிந்து வெளுத்த                             நிறத்துடன் ஆடும் ஆடல்
    அல்லியம்        -    திருமால் கம்சனை வதைக்க ஆடிய ஆடல்
    மல்            -    திருமால் மல்லனை வெல்ல ஆடிய மல்லாடல்
    துடி            -    முருகன் சூரனைக் கொல்லக் கடல் நடுவில்                         ஆடிய துடிக்கூத்து
    குடை            -    அரக்கரை வெல்ல முருகன் ஆடிய                                 குடைக்கூத்து
    குடம்            -    திருமால் அநிருத்தனை விடுவிக்க ஆடிய                             குடக்கூத்து
    பேடு            -    காமன் பெண்மைக் கோலத்தோடு ஆடிய பேடியாடல்
    மரக்கால்        -    கொற்றவை மரக்கால் கொண்டு ஆடிய பாடல்
    பாவை            -    திருமகள் கொல்லிப் பாவையாய் ஆடிய ஆடல்
    கடையம்        -    இந்திராணி ஆடிய கடைசிக்கூத்து
    இப்பதினொருவகை ஆடல்களில்ää புராணக்கருத்துகள் கலந்து இருந்தன என்பதை ஆடல்வகையின் விளக்கங்கள் மூலம் அறியலாம்.
சிலம்பு காட்டும் நாடகம்
    ஆயர்சேரியில் தீய நிமித்தங்கள் தோன்றும் பொழுது    அதனைக்கண்டு அஞ்சிய ஆயர் மகளிர் குல தெய்வமான கண்ணனை வேண்டி குரவைக்கூத்து ஆடிய செய்தியை சிலம்புää

        “ ஆயர்பாடியில் எருமன்றத்து
        மாயவனுடன் தம்முள் ஈடிய   
        வாலசரிதை நாடகங்களில்ää
        வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
        குரவை ஈடுதும் யாம் என்றாள்”.
                            (ஆய்ச்சியர்குரவை 3;11-15).
    ஆயர்பாடியில் பூந்தாதுகள் நிறைந்த மன்றத்திலேää தம் முன்னோனாகிய பலராமனுடன் கண்ணன் விளையாடிய வாலசரிதை நாடகங்களில்ää வேல்போன்ற நெடுங்கண்களையுடைய பிஞ்ஞைப் பிராட்டியோடு அவன்  ஆடிய குரவைக்கூத்தினை நாமெல்லாரும் இப்போது ஆடுவோம் என மாதரி தன் மகளிடம் கூறியதாக அக்காலத்து நாடகம் பற்றிய செய்தியை இளங்கோ பதிவு செய்துள்ளார்.
    மேலும் குன்றக்குரவையில்ää
        “உரவுநீர் மாகொன்ற வேல் ஏந்தி ஏத்திக்
        குரவை தொடுத்தொன்று பாடுகம் வாää தோழி”.                                    (குன்றக்குரவை 7: 3ää4).
    முருகனைப்போற்றி குரவைக் கூத்தாடிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
    வேட்டுவர் வரிப்பாட்டு பாடி மரக்கால் கூத்தாடிய செய்தியைää
        “ ஆங்குத்ää
        துன்று மலர்ப்பிணையல் தொள்மேல் இட்டு ஆங்குää
        அசுரரர் வாடää அமரர்க்கு ஆடிய
        குமரிக் கோலத்துக் கூறுகள் படுமே”.
                                (வேட்டுவவரி 10)
        இளங்கோவடிகள் காட்டுகிறார்.    

முடிவுரை
            “ அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழியää
            மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
            கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்ää
            மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்ää
            கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்ää
            திங்கள் வாள்முகம் சிறுவியர்பு இரியச்ää
            செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்ää
            பவள வாள்நுதல் திலகம் இழப்பää
            மைஇருங் கூந்தல் நெய் அணி மறப்பக்ää
            கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்.”.                        முத்தமிழின் சிறப்பு பற்றி அறிய இப்பாடல் தக்க சான்றாகும்.     சாதாரண குடிமக்களை கதைமாந்தர்களாக்கிய சிறப்பு சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளையே சாரும். மக்கள் மத்தியில் வழங்கி வந்த கதையை மூலமாகக் கொண்டு எழுந்த காப்பியம் என்பது கூடுதல் சிறப்பாகும். இளங்கோவடிகள் கதை சொல்லும் நேர்த்தியில் ஒவ்வொரு கதை மாந்தரும் நிறுவப்பட்டு அவர்களின் வாயிலாகவே இயல்ää இசைää நாடகம் என்னும் முத்தமிழ் பற்றிய வரலாற்றினை மிகத்துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.

சங்க இலக்கியத்தில் மனிதவள மேம்பாடு- முனைவர் கரு.முருகன்

சங்க இலக்கியத்தில் மனிதவள மேம்பாடு
முன்னுரை
        இலக்கியம் என்பது அது தோன்றும் சமூகத்தின் பிரதி. அச்சமும் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாகும். வேறெந்த மொழிகளிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்மொழி இலக்கிய வளமுடையதாகக் காணப்படுகின்றது. அவற்றுள் வாழ்வியல் கருத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன. சங்கப்புற நூல்களான புறநானூறுää பதிற்றுப்பத்துää ஆற்றுப்படை நூல்கள்ää மதுரைக்காஞ்சி ஆகியவற்றின வாயிலாக அக்காலத்திலிருந்த மனித வளங்களைக் கண்டறிவது இவ்வியலின் நோக்கமாகும்.
மனிதவளம்
        இவ்வளத்தின் உட்கூறுகளாக உடல் வளமும்ää மனவளமும் திகழ்கின்றன. மனவத்தினுள் அறிவு வளமும்ää ஒழுக்க வளமும் இடம் பெறுகின்றன. உடல் வளத்தினால் அன்னனும்ää குறுநில மன்னனும் மக்களுடைய தேவைகளை அறிந்து நிறைவேற்றுகின்றனர். ஒவ்வொரு நிலத்திலுள்ள தலை மக்களும் அவர்கள் அல்லாத பிறரும் தம் வளங்களால் பல்வேறு வகையான தொழில்களைச் செய்து மேம்பாடு அடைந்துள்ளதாகக் காணலாம்.
தொழில்கள் - வரையறை
        பெயர்ச் சொல்லாகிய உழைப்பு ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கின்றது. உழைத்தல் என்பது வினைச்சொல்லாக இடம்பெறுகிறது. உழைப்பவர் இனம் என்பது பொதுவாகத் தொழிலாளர்களைக் குறிக்கின்றது. மார்சல் என்ற பொருளியலாயர் உழைப்பிற்குப் பின்வருமாறு இலக்கணம் கூறுகின்றார். “உழைப்பு என்பது மூளையையோää உடலையோ முழுவதுமாகவோ பகுதியாகவோ வருத்தி ஏதோ ஒன்றைப் படைப்பதற்காகச் செய்கின்ற செயலைக் குறிக்கும். ஆனால் அந்தச் செயலிலிருந்து கிடைக்கம் மகிழ்ச்சியை உழைப்பு உள்ளடக்காது. இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும். கல்வி அறிவில்லாத தொழிலாளர்களின் உற்பத்தி முயற்சிகளும்ää கைத்தொழில் கலைஞர்கள்ää கல்வியாளர்கள்ää ஆசிரியர்கள்ää வழக்கறிஞர்கள்ää நீதிபதிகள்ää எழுத்தாளர்கள்ää வேளாண்மைத் தொழிலாளர்கள்ää வணிகர்கள்ää கலைஞர்கள்ää இலக்கிய அறிஞர்கள்ää மருத்துவர்கள்ää அறிவியல் வல்லுநர்கள்ää நிருவாகிகள் ஆகியோரின் பணிமுயற்சிகளும் பார்சலின் உழைப்பு இலக்கணத்துள் அடங்குகின்றன”1 என்கிறார்.

        சங்க காலத்தில் அரசர்ää அந்தணர்ää வணிகர்ää வேளாளர் என்னும் நாற்பெரும் பிரிவினர் சமூகத்தின் உயர்நிலையில் இருந்துள்ளனர். இவர்களைத் தவிரச் சமூகத்தின் நல்வாழ்வுக்க உதவும் தொழில்களைச் செய்த பல்வேறு தொழிற் பிரிவினரும் இருந்துள்ளனர். நில அடிப்படையில் குறவர்ää ஆயர்ää உழவர்ää பரதவர்ää எயினர் என்ற தொழிற்பாகுபாடு காணப்பட்டது. மேலும் தச்சர்ää கொல்லர்ää குயவர்ää வண்ணார்ää நெசவாளர்ää உமணர்ää பறையர்ää பாணர்ää துடியர்ää கடம்பர்ää வேட்டுவர் போன்ற பகுப்புகள் காணப்படுகின்றன.
பயிர்த்தொழில்
        மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவாகும். இவற்றிற்கு மூலகாரணமாக விளங்குவது உழவும் அதன் சார்புத் தொழில்களுமாகும். இதனைத் தொல்காப்பியம்ää
        “வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லது
         இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி”2
                            (தொல்.பொருள்.மரபு.81)
எனக் குறிப்பிடுகின்றது. உழவிற்குத் தேவையான கருவி கலப்பையாகும். இக்கலப்பையில் நன்கு நடைபயின்ற எருதுகளைப் பூட்டி ஆழமாக உழுதனர்.
வணிகத் தொழில் (வணிக வளம்)
        ஒரு நாட்டின் தொழில்களில் முக்கியத் தொழிலாக வாணிபமும் இடம்பெற்றுள்ளது. இத்தொழில் பழங்காலத்திலே இருந்து வந்துள்ளது. இவ்வணிகம் உள்நாட்டு வணிகம்ää வெளிநாட்டு வணிகம் என்ற இருவகையில் நடைபெற்று வந்துள்ளது. “பண்டைச் காலத்திலே வணிகத்தின் பெருமையை நன்குணர்ந்து அதனைத் தம் தொழிலாகக் கொண்டு வாழ்ந்த புலவர் பலர் உளர். கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்ää நெல்ää புல்ää வரகு முதலிய தானியங்களை விற்ற கூலவாணிகனாவார். அறுவை வணிகன் இளவேட்டனார்
என்பவர் ஆடை வியாபாரி. பலசரக்கு வியாபாரம் செய்தவர் மதுரைப் பண்ட வாணிகன் இளந்தத்தனார். மதுரைப் பெருங்கொல்லனார்ää உறையூர் இளம்பொன் வாணிகன் சாத்தங்கொற்றனார்”3  முதலியோரின் பெயர்களிலேயே தொழில் இடம்பெற்றள்ளதை சு.வித்தியானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வணிகம்
        தமிழ்நாட்டில் பிறநாட்டார் உள்ளத்தைக் கவரும் பொருட்கள் நிறைந்திருந்தன. அவற்றில் முக்கியமானவைகளாக முத்துää பவளம்ää பெண்துகில்ää சங்குää மிளகு போன்றவைகள் திகழ்கின்றன. யவனர் என்பவர் கிரேக்கரும் உரோமரும் ஆவார். இவர்கள் பொன்னொடு வந்து மிளகொடு பெயர்ந்தனர் என்பதைää
        “யவனர் தந்த வினைமாண் நன்கலம்
         பொன்னொடு வந்த கறியொடு பெயரும்”        (அகம்.149)
என்று அகநானூறு குறிப்பிடுகின்றது.
அறிவு
        இயற்கையால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களையும் போற்றிப் பாதுகாப்பவன் மனிதன். அதனால் தான் மற்ற உயிர்கள் எல்லாம் ஐந்தறிவோடு இருக்க மனிதனுக்கு மட்டும்ää
        “ஆறறி வதுவே அவற்றொடு மனனே”4    (தொல்.1526)
என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கேற்பப் பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவும் படைக்கப்பட்டுள்ளது.
        உலகியல் உண்மைகளைக் காண்பதற்கு மனிதனுக்குத் துணை செய்யும் கருவி அறிவாகும். நல்லவைää அல்லவைகளை அறிந்து அவற்றின் வழி நடப்பதும் அறிவாகும். இவ்வறிவு அவரவர் மனநிலையைப் பொறுத்து அமைகின்றது.
        “அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்”        (கலி.133)
என கலித்தொகை அறிவிற்கு இலக்கணம் வகுத்துத் தருகின்றது.
        அறிவு எனப் பொதுவாகக் குறிப்பிடுவதை ‘நல்லறிவு’ என்று சுட்டுவதைää
        “நல்லறிவு உடையோர் நல்குரவு
         உள்ளுதும் பெருமயாம் உவந்து நனி பெரிதே”
                                (புறம்.197:17-18)
        “நல்லறிவு இழந்த காமம்”        (குறு.231)
என்னும் அடிகளின் மூலம் அறியமுடிகிறது.

கல்வி – விளக்கம்
கல்வி என்னும் சொல் ‘கல்’ என்னும் சொல்லை அடியாகக் கொண்டு தோன்றியதாகும். இச்சொல்லுக்கு உள்ளத்திலுள்ள அறியாமையைக் ‘கல்லுதல் அல்லது ‘தோண்டுதல்’ என்பது பொருளாகும்.
    ஆரிப்படை கடந்த நெடுசெழியன் கல்வி கற்கச் செய்ய வேண்டிய நெறிமுறைகளைத் தம் புறப்பாடலில்ää
        “உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
         பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே”    (புறம்.183:1-2)
என எடுத்துரைத்துள்ளார். கல்வி கற்றுக் கொடுப்பவர்களுக்குத் தானம் செய்தோää உதவி செய்தோää சம்பளம் கொடுத்தோ மதிப்பிற்குரிய கல்வியைப் பெறவேண்டும்.
ஒழுக்கம்
            ஒழுக்கம் என்பது “நல்ல வேதியரைத் தம் குரவர் போல் எண்ணல்ää குரவரை நமஸ்கரித்தல்ää கண்டவுடன் எழுந்திருத்தல்ää துறவிகளைக் காத்தல் பழிவாவங்களக்கஞ்சல்ää குரவர் முன் புகழாமைää பார்ப்பார்ää தவசிää சுமையுடையார்ää நோயாளர்ää பாலியர்ää பசுக்கள்ää பெண்டிர் இவர்களுக்கு வழிவிலகிச் செல்லல்”5என்று அபிதான சிந்தாமணி கூறுகின்றது.
ஒழுக்கத்தின் வகைகள்
    தொல்காப்பியர் ஒழுக்கத்தினை நல்வழிப்படும் ஒழுக்கம் என்றும்ää அல்வழிப்படும் ஒழுக்கம் (தீயொழுக்கம்) என்றும் இருவகையாகச் சுட்டிக் காட்டுகிறார்.
       

        “ஆங்காங்கு ஒழுகும் ஒழுக்கமும் உண்டே
         ஓங்கிய சிறப்பின் ஒரு சிறையான”6 (தொல்.பொருள்.1080)
        “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்
         துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை”7
                                (தொல்.பொருள்.1081)
         “பெரியோர் ஒழுக்கம் பெரிது”        (தொல்.பொருள்.1096)
         “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும்”
                                (தொல்.பொருள்.1098)
இவை தொல்காப்பியர் கூறும் நல்வழி ஒழுக்கங்களாகும்.
நல்லொழுக்கம்
        ஒழுக்கம் என்பது மக்களின் வாழ்வியலை முறைப்படுத்துவதில் முதன்மையானகாகக் திகழ்ந்துää உயிரினும் மேலானதாகக் கருதப்படுகின்றது. ‘கல்வியைவிடச் சிறந்தது ஒழுக்கம்’ என்பதைப் பதினென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுகின்றது. தந்துமாறனிடம்சங்கவருணர்ää நாள்தோறும் நல்ல ஒழுக்கம் நினைவுகளோடு முழற தவறாமல் வாழ வேண்டும் என்ற அறிவுறுத்தியுள்ளதைää
        “நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
         நச்சுவர் நிரப்பல் ஓம்புமதி”        (புறம்.360:13-14)
என்று புறநானூறு கூறுகின்றது.
        அதர்வணம்ää ரிக்ää யஜூர்ää சாம வேதங்களைப் பொருள் தெரியும்படி ஒதுகின்றன. விழுமிய தலைமையொடு பொருந்திய ஒழுக்கம் உடையவர். உயர்ந்த நிலையையுடைய தேவர் உலகத்தை இவ்வுலகில் இருந்து பெறுபவர். ஆறநெறி பிழையா அன்புடைய நெஞ்சங்கொண்ட எபரியோராவர் என்பதைää
        “சிறந்த வேதம் விளங்கப் பாடி
         விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்துää
         நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகிää
         உயர்நிலை உலகம் இவண்நின்று எய்தும்
         அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
         பெரியோர் மேஎய்ää இனிதின் உறையும்
         குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளி”(மதுரைக்.468-474)
என்று மதுரைக்காஞ்சியடிகள் அந்தணரின் சிறப்புகளைச் சுட்டுகின்றன.
        மதுரைக்காஞ்சியில்ää மதுரை நகரில் இருந்த வரைவின் மகளிராகிய பரத்தையார் தம் குடியிருப்பும் அவர்தம் செயற்பாடும் கூறப்பட்டுள்ளது.
        “நுண்பூ ணாகம் வடுக்கொள முயங்கி
         நாயப் பொய்பல கூட்டிக் கவவுக்கரந்து
         சேயரும் நணியரும் நலனயந்து வந்த
         இளம்பல் செல்வர் வளந்தப வாங்கி
         நுண்தா துண்டு வறும்பூத் துறக்கும்
         மேன்சிறை வண்டினம் மானப் புணர்ந்தோர்
         நெஞ்சே மாப்ப இன்துயில் துறந்து
         பழம்தேர் வாழ்க்கைப் பறவை போலக்
         கொழுங்குடிச் செல்வரும் பிறரும் மேஎய
         மணம் புணர்ந் தோங்கிய அணங்குடை நல்லில்”
                                (மதுரைக். 569-578)
என்றும்ää
        “வானவ மகளிர் மானக் கண்டோர்
         நெஞசு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்” (மதுரைக்.582-583)
எனக் கூறப்பட்டுள்ளது. பழுமரம் தேடிச்செல்லும் பறவை போலää செல்வக் குடியினர் வந்து தங்கிப்போகும் வளமான இல்லமாகப் பரத்ததையர் இல்லம் காட்டப்பட்டுள்ளது. பிறர் நெஞ்சை நடுங்கச் செய்யும் வானவ மகளிர் போன்ற கொண்டி மகளிர் என இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். மாயப்பொய் பல கூட்டும் மாயத்தராகவும் சுட்டப்பட்டுள்ளனர். இவர்கள் வளமான குடியிருப்பினை உடையவராக இருந்துள்ளனர் என்ற சூழலை மதுரைக்காஞ்சி வெளிப்படுத்துகின்றது.

        “சங்ககாலச் சமுதாயக் குடும்பத்தில் காணவனாயிருக்கம் ஆண் குடும்பத்துக்க வெளியே காமக்கிழத்தி காதற்பரத்தை முதலான பெயர்களில் பல பெண்களோடு பாலியல் சேர்க்கை கொள்வதிலிருந்து அவனைத் தடுக்கும் வழக்கமோ சட்டமோ கிடையாது. இத்தகைய மீறல்களை அன்றைய சமூகம் பொருட்படுத்தவில்லை”8 எனக் கூறுவர் ராஜ்கௌதமன். இவ்வாறாகப் பரத்தமை ஒழுக்கம் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவி வந்துள்ளதை அறியமுடிகின்றது.

    வளம்ää இயற்கைவளம்ää மனிதவளம் என இருவகையாகப் பகுக்கப் பட்டுள்ளது. இயற்கை வளத்தினுள் நானில வளமும்ää மனித வளத்தினுள் உடல் வளமும்ää மனவளமும் இடம்பெற்றுள்ளன. உடல்வளம் தொழில்களின் அடிப்படையில் அமைகின்றது. மனவளம்ää அறிவுவளம்ää ஒழுக்க வளம் என்ற பகுக்கப்பட்டுள்ளது. மன வளத்தினுள் ஒன்றாக அமைவது ஒழுக்கம். இவ்வொழுக்கம் உயிரினும் மேலானதாகக் கருதப்பட்டுää மனிதவள மேம்பாட்டிற்கு வழிகோலுகிறது என்பதை அறியமுடிகின்றது.

 சான்றெண் விளக்கம்
1.    வி.சி.சசிவல்லிää பண்டைத் தமிழர் தொழில்கள்ää        பக்.      36-37
2.    தொல்.பொருள்.                           மரபு.     81
3.    சு.வித்தியானந்தன்ää தமிழர் சால்புää              பக்.      145-146
4.    தொல்.பொருள்.                           மரபு எண். 81
5.    அ.சிங்காரவேலு முதலியார்ää அபிதான சிந்தாமணிää      ப.       297
6.    தொல்.பொருள்.                           களவு    1080
7.    மேலதுää                                      1081
8.    பெ.மாதையன்ää சங்க இலக்கியத்தில் குடும்பம்ää      ப.      145

நாட்டார் வழக்காற்றில் சிலப்பதிகாரம் - முனைவர் கரு.முருகன்

முன்னுரை:
தொடக்க காலத்தில் மனித உணர்வு பட்டறிவால் பதப்பட்டும்ää பட்டை தீட்டப்பட்டு வந்துள்ளது. பட்டறிவே மனித மனத்தை ஒழுங்கு செய்யும் உன்னத கருவியாக உள்ளது. ஆதிகாலத்தில் மனிதன் பின்னிப்பிணைந்தே வாழ்ந்து வந்தான். உணர்ச்சிகளின் உயிரோட்டங்களே மானிடவியல் வளர்ச்சி ஆகும். மானுட சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியே ஆய்வு என்பதன் தொடக்கமே நாட்டார் இயல் ஆய்வு ஆகும். அவ்வாய்வு 19 ஆம் நூற்றாண்டிலே முதன்மைபெற ஆரம்பத்துவிட்டன. ஆனால் நாட்டார் வழக்காற்றின் கட்டமைப்பின் அடிப்படையில் இலக்கியங்கள் உள்ளவை என்பதனின் தேடலே ‘நாட்டார் வழக்காற்றில் சிலப்பதிகாரம்’ ஆகும்.
நாட்டாரியல் - (மரபு அறிவியல்)
    “நாட்டார்” என்ற கலைச்சொல்லை வரலாற்று அடிப்படையில் குழடம என்ற ஆங்கிலச் சொல்லின் மாற்றீடு (வுசயகெநசநnஉந) ஆகும். நாட்டுப்புற மக்களின் பண்பாடு சார்ந்த ‘தொல்சீர் செந்நெறி’ (ஊடயளளiஉயட) என்பர் ஆய்வாளர்கள். நாட்டார் வழக்காறு என்பது மனிதவியல் (ர்ரஅயnவைநைள) சார்ந்த தொல்பெருமை ஆகும். பேராசியர் லோறி ஹொன்கோ (டுயரசநை ர்ழமெழ)இ முதலாம் பின்னிஷ் போன்ற அறிஞர்கள் ‘குழடமடழநெ’ குழடழமழசளைவiஉள எனவும்ää மரபு அறிவியல் (வசயனவைழையெட ளநநைnஉந) எனவும் அறிஞர்கள் வகைப்படுத்துவர். இலங்கையில் 1980 இல் ‘யாழ் பல்கலையில் தமிழ்த்துறை ஒழுங்கமைப்புச் செய்த கருத்தரங்கில்’ குடழமடழசந நாட்டார் வழக்காற்றியல் என மொழிபெயர்ப்பை உறுதி செய்ததை சான்றுகளால் அறியமுடிகிறது.
    இங்கு மரபு அறிவியல் என்கிற நாட்டாறியல்
•    பண்பாடு
•    இலக்கியம்
•    நுண்கலைகள்
•    நுட்பம்
இன்னும் பிற இவை மக்களின் வேட்கைகளை தணிக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்கள்ää மொழிää வாய்மொழி இலக்கியம்ää பாட்டுää இசைää ஆடல்கள்ää உணவுää உறையுள்ää நம்பிக்கை சார்ந்தவை என்பன நாட்டாரியல் ஆகும்.
நாட்டார் வழக்காற்றில் சமயவுணர்வுää சமுதாய வாழ்வுää நம்பிக்கைகள்ää பழக்க வழக்கங்கள்ää உறவு முறைகள்ää உணர்ச்சிக்கூறுகள்ää என உள்ளடக்கியவை. நாட்டார் வழக்காறு என்பது வாழ்க்கைää அறிவுää மனம் என்ற நிலைகளைக் கொண்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்த மட்டில் சமய உணர்வை மையப் படுத்தியே கலைகள் பெரும்பான்மையாக உள்ளன. நாட்டார் வழக்காற்றுக் கலைகளாக பாடல் (இசை) ஆடல் (நடனம்) கூத்து (நாடகம்) ஓவியம்ää கல்ää சுதைää மண் சிற்பம்ää கட்டிடக்கலை இவையோடு இன்னும் பிறவும் சாதி சமயப் பிரிவுகளின் பயனாக மக்களின் பழக்க வழக்கத்திலும் நம்பிக்கையாலும்ää பண்பாடிலும் வேருன்றி உள்ளன. காலச்சுழற்சியின்ää காரணமாக தமிழகத்தில் மேலை நாட்டு வழக்காறுகல் வந்து இருக்கலாம். ஆனால் தமிழுக்கே உரிய நாட்டார் வழக்காற்றியல் கலை முதற்கொண்டு வாழ்வியல் கட்டமைப்பில் பின்னிப்பிணைந்துள்ளன.


சிலப்பதிகாரம்
    சிலப்பதிகாரம் சங்கம் மருவிய காலத்தில் கி.பி.300-லியிருந்து. கி.பி 700-வரையறுக்கப்பட்டு உள்ளது. சிலம்பின் வழியான அதிகாரத்தை சுட்டப் பெறுவதால் சிலப்பதிகாரம் என அமையப்பெற்றது என்பர். சிலப்பதிகாரத்தை  தொன்று தொட்டு அல்லது தலைமுறை தலைமுறையாக என உரைக்கும் பொழுதுää சில தலைமுறை தொடர்பான ஒழுக்கம் எனப் பகுக்கலாம். இதில் சிலப்பதிகாரம் என்பது நாட்டார் வழக்காறு என்கிற நாட்டுப்புறக்கதையில் உள்ள உணர்ச்சியும்ää தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான உள்ளுறையாக உளப்பகுப்பாலான மெய்ஞானம் முதன்மை பெறுகிறது.
    தமிழனுடைய பண்பாடு கலாச்சாரம் எல்லாம் கிராமக் கட்டமைப்பாலே இன்னும் உணர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழிசை நாட்டுப்புற இசையின் அடிப்படை ஆகும். தொல்காப்பியத்தில் இந்த தமிழிசைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும் தமிழிசையே முதன்மை பெற்று காப்பியப் போக்கை கையாளுகின்றன.
நாட்டார் வழக்காற்றில் சிலப்பதிகாரம்
சங்க இலக்கியத்திற்கு அடுத்த நிலையில் இசை பரந்து காணப்படும் இலக்கியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலம்பின் ஆசிரியர் கற்றுணர்ந்த பண்பாட்டு மாமேதை என்பதால் நாட்டார் வழக்காற்றில் இசைää இசையோடு கூடிய கூத்துää நாடகம் இன்னும் போல்வன கலங்கரை விளக்கமாக உள்ளது. நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப் பாடலை மையமாக கொண்டே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதி இருக்க வேண்டும். நாட்டுப்புற பாடல்களில் முதன்மை பெறுகிற காதல் கருப்பொருளைச் சங்க இலக்கிய ஐந்திணை அகப்பொருளும் அமையப் பெறுகிறது. இதைப் போல் சிலப்பதிகாரத்திலும் வரும்.
    கானல் வரி
    வேட்டுவ வரி
    குன்றக்குரவை
    ஆய்ச்சியர் குரவை
என்பன நாட்டார் மரபில் வரும்  இசையோடு மக்களின் வாழ்வியல் வழக்காறுகளை மையப்படுத்துகிறது.
கதை சொல்லல் ………..
காப்பியங்கள் தோன்றுவதற்கு கதைப் பாடல்களே மூலக் காரணம் என்றால் அவை மிகை ஆகாது. ஒரு நாள் சேரன் செங்குட்டுவன்ää அரசி வேண்மாள்ää மதுரைச் சங்கப் புலவரான சாத்தனார்ää அரசைத் துறந்து குணவாயிற் கோட்டத்தில் அருந்தவம் புரிந்திருந்த இளங்கோவடிகள் ஆகிய இந்நால்வரும் இயற்கையழகை நுகரத் திருசெங்குன்றத்திற்குச் சென்றனர். இக்குன்றம்ää கொடுங்கோளுர் பக்கத்தில்ää வஞ்சியின் அருகே இருக்கிறதென்பர். அக்குன்றக் குறவர் ஒருங்குகூடிää அரசனிடம் வந்து வணங்கிää அடிகளிடம்ää “பொன்மலர் பொலியும் வேங்கை மரமொன்று அதோ உள்ளது. அதன் கொழு நிழலில்ää ஒற்றை முலையிழந்த ஓர் அழகிய வீரபத்தினி நின்றாள். தேவேந்திரனைச் சார்ந்த தேவர்கள் அவள் முன் வந்து வணங்கிää அப்பத்தினியின் கணவனை அவளுக்குக் காட்டினர். உடனே அவளுடன் அனைவரும் எமது கண்காண விண்ணகம் சென்றனர்.” என்ற ஓர் அதிசயச் செய்தி சொன்னார்கள். இச்செய்தி கேட்ட சேரன் வியந்துää அப்பத்தினியின் முழு வரலாற்றையும் அறிய அவாவினான். “ அப்பத்தினிக்கு விழைந்ததை யான் அறிவேன்” என்று மதுரைப் புலவர் சாத்தனார் விளம்பலானார். நாட்டுப்புறங்களில் கண்ணகி கதை கூத்தாகி ஆடப்பட்டு வந்தது. அந்தக் கூத்தினை 1948 இல் ரா.பி.சேதுப்பிள்ளை பதிவு செய்துள்ளார். தமிழ் இன்பம் என்னும் நூலில் ‘கண்ணகிக் கூத்து’ என்னும் கட்டுரையில் இதனைப் பதிவு செய்குள்ளார். முதன் முதலில் கண்ணகி கூத்தினை விமர்சனம் செய்த ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் சிலப்பதிகாரத்திற்குப் பின் வழங்கி வரும் நாட்டுப்புறக்கதை எனும் கோணத்திலேயே அக்கூத்தினை அணுகியுள்ளார். சிலப்பதிகாத்தோடு ஒப்பிட்டுää அக்கூத்து இலக்கியத்தின் வடிவத்தில் சிதைந்திருப்பதைப் குறித்துள்ளார்.
இந்த கதைச் சொல்லல் வழியாகத் தான் சிலப்பதிகாரக் காப்பியம் தோன்றியது என்றால் நாட்டார் வழக்காற்றின் மூலக் கருவாகும்.
கானல்வரி
    கிராமப்புறங்களில் இன்னும் வழக்கங்களில் உள்ள பண்டிகைக் கால விழாக்களில் கும்மி முதலான நாட்டார் வழக்காறுகளி;ல் தங்கள் எண்ணக்கருத்துகளை இலைமறை காயாக வெளிபடுத்துவது வழக்கம். இந்த நிலையிலே கானல்வரி அமையபெற்றுள்ளது.
    ‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அது போர்த்துக்
    கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி
    கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
    திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி’
    என மனக்கருத்தினை மையப்படுத்தி இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.
குரவைக் கூத்தினையும் அது ஆடும்போது பாடும் வாய் மொழிப் பாடலாக அமையப்பெறுகிறது. குரவை என்பதனைää   
    ‘குரவை என்பது எழுவர் மங்கையர்
    செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து
    அந்நிலைக் கொட்ப நின்றாட லாகும்’
என்றும் விளக்கியுள்ளார் அடியார்க்கு நல்லார். கானற் பாணியே நாட்டுப்புறப்பாடல்தாம் என்பர் அ.மு.ப. வாழ்த்துக்காதையில் அம்மானைää கந்துக வரிää ஊசல் வரி முதலிய பல நாட்டுப்புற விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளமையையும் குறித்துள்ளார்.
எசைப்பாட்டு
சிலம்பில் வினா-விடை என்ற பொதுக் கூற்றிலும் கதை நிலைக் கூற்றாகவும்ää தமிழிசையில் முரிவரிப் பண் என்கிற அதாவது முறித்து பாடுதலே எசைப்பாட்டு என்கிற எதிர்ப்பாட்டு ஆகும்.
கோவலன் பாடுகிறான்
    பொழில்தரு நறுமலருர புதுனணம் விரிமணலே
    பழுதரு திருமொழியே பணைஇள வனலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில் இணையே
எழுந்தரும் பின்னிடையே எனையிட செய்வதையே
                                  என்கிறான்.
அம்மானைவரி
அம்மானை என்பதற்குத் தாய்ää தலைவிää ஆடுங்கருவிää தீ என்ற பொருள் உண்டு. கலம்பலக உறுப்புää வரிப்பாடல்ää பெண்பால் பிள்ளைத் தமிழ் உறுப்பு என்ற நிலையிலும் அமைகின்றது. பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானைää அவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடல் அம்மானைவரிää அவ்விளையாட்டில் பயன்படுத்துவது அம்மானை காய்ää அம்மானைபாட்டு கதைப் பாடலைக் குறிக்கும்.”
தமிழில் அம்மானை என்ற சொல்லுக்குப் பொருள் கதைப் பாடல் எனவும் பொருந்தும். அம்மானை என்ற சொல் சிலப்பதிகாரத்தில் தான் முதலில் கையாளப் பட்டுள்ளது.
“வீங்கு நீர் உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்காணங் காத்த உரவோன்யார் அம்மானை
ஓங்காணங் காத்த உரவோன் உயர்விசும்பல்
தூங்கையில் மூன்நெறிந்த சோடின்காண் அம்மானை
சோடின் புகாத்நகரம் பாடலோர் அம்மானை”
பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானை. அவ்விளையாட்டில் பயன்படுத்துவது அம்மானைக்காய். அம்மானைப் பாட்டு என்பது கதைப்பாடலையும் குறிக்கும். மகளிர் இருவர் வினா விடையாக இரு பொருள்படப் பாடுவது அம்மானை மடக்காகும்.
        “அம்மானை தம்கையில் கொண்டு அங்கு அணியிழையார்
         தம்மனையில் பாடும் தகையேலோர் அம்மானை”
என்றும்ää அம்மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை என்றும் பாடியுள்ளார்.
இசை
    கோவலன் மாதவி பிரிவான கானல்வரி சிலம்பின் முக்கிய பகுதியாகும் நாட்டார் இசையில் அக அழகே காதலில் முதன்மைப் பெறுகிறது. ஆனால் முக அழகு என்பது காதல் அல்லாக் காமமாகும் என வாழ்க்கை என்பதையே உணர்த்தி நிற்கும். “யாழ் ஏறி வந்த ஊழ்”- என்கிற அந்தக் கானல் வரி கிராமிய இசையான எசைப்பாட்டு என்ற கட்டமைபில் அமைக்கப்பட்டு உள்ளது.
    கானல் வரி
    வேட்டுவ வரி
    குன்றக்குரவை
    ஆய்ச்சியர் குரவை
    ஊர்சூழ் வரி
    வாழ்த்துக் காதை
ஆகிய ஆறுமே நாட்டார் இசையின் தொகுப்பாகும்.
நாடகம் அல்லது கூத்து
தொல்காப்பியம் கூறும் நாடக வழக்குää உலக வழக்குää என்பதில் நாடக வழக்கு என்பது அடித்தட்டு மக்களின் பிரதிபலிப்பு ஆகும். சங்க இலக்கியத்தில் வரும் வெறியாட்டு சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியக் குரவைää குன்றக் குரவைää வேட்டுவவரி ஆகியவை ஆகும். தமிழ் நாடகங்களைப் பொருத்தமட்டில் பழந்தமிழ் உரையாசிரியர்கள்
    வேதியல் (அரசர்ää அவரோடு ஒத்தவர்)
    பொதுவியல் (பொதுமக்கள்)
எனப் பகுப்பார்
சிலப்பதிகாரம் உரையாசியர் அவர்களுக்கு நல்லார் நாடகம் அல்லது கூத்து என நுட்பமாகப் பகுக்கிறார்.
“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
 பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
 பதினோர் ஆடலும்ää பாட்டும்ää கொட்டும்ää
 விதிமாண்கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு
 ஆடலும் பாடலும்ää பாணியும்ää தூக்கும்ää
 கூடிய நெறியின் கொளுத்தும் காலை-
 பிண்டியும்ää பிணையலும்ää எழில் கையும்ää தொழில்கையும்ää
 கொண்டவகை அறிந்துää கூத்து வரு காலை
 கூடை செய்த கை வாரத்துக் களைதலும்ää
 பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்ää
 ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்ää
 குரவையும் வரியும் விரவல செலுத்தி
 ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும்”
-    (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை – 12-25 வரிகள்)
கூத்தின் வகையினை கீழ்காணுமாறு வகைப் படுத்துகிறார்ää
    வகைக் கூத்து
    புகழ்க் கூத்து
    வரிக் கூத்து
    வரிசாந்திக் கூத்து
    சாந்திக் கூத்து
    விநோதக் கூத்து
    ஆடைக் கூத்து
    தமிழ்க் கூத்து
    இயல்புக் கூத்து
    தேசிக் கூத்து
எனப்பத்தாக வகைப் படுத்தலாம்.
ஒப்பாரி
தமிழர் பண்பாட்டில் இன்று வரை நாட்டார் வழக்காற்றில் கையாளப் பெறுவது ஒப்பாரிப் பாடல் ஆகும். இது இசையோடு கூடிய முகாரி ராகச் சாயலுடன் அமையப் பெறுவது ஆகும். தாய்ää தந்தைää கணவன்ää பிள்ளைää உற்றார்ää உறவினர் இறந்து விட்டாலோää அல்லது தாழத துயரம் அடைந்து விட்டாலோ உள்ளதில் அடக்க முடியாத துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரிப் பாடப் பெறுகிறது. 
கணவனைப் பிரிந்த பத்தினியான கண்ணகி நிலைமையென்ன? கலக்கம்! துன்பம்! துன்பம்! இதை இளங்கோவடிகள் அந்திமாலை சிறப்புக் காதையில்ää
    “அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழியää
    மென்றுகில் அல்குல்ää மேகலை நீங்கக்
    கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
    மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
    கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்.
    திங்கள் வாண்முகம் சிறுவியர் பரியச்ää
    செங்கயல் நெடுங்கண் அஞ்ச மறப்பப்
    பவள வானுதல் திலக மிழப்பத்
தவள வாணகைää கோவல னிழப்ப
மையிருங்கூந்தல்ää நெய்யணி மறப்பக் 
     கையறு நெஞ்சத்து கண்ணகி…”  
    சேவடி சிலம்பிழந்தது. மெல்லிய ஆடையணிந்த இடை மேகலையிழந்தது. கண்ணகி கொங்கையிற் குங்குமம் எழுதாள். மங்கல அணி தவிர வேறணி விரும்பாள். காதிற் குழையில்லை. மதிமுகத்தில் சிறு வியர்வை பிரிந்து. கண்ணில் அஞ்சனம் இல்லை. நெற்றியிற் பொட்டில்லை. அவளது வெண்ணகைää கோவலனை யிழந்து மங்கியது.  கூந்தலுக்கு நெய்தடவி வாரவும் மறந்தாள். மனமுடைந்து கவலைபெருகிää நாயகனையே நினைத் தேங்கினாள் என கண்ணகியின் நிலையை ஒப்பாரியில் துன்ப உணர்வை வெளிப்படுத்துகிறார்.
கனவுகளும் நிமித்தங்களும்
        கதைப் பாடல்களில் கனவுகளும் நிமித்தங்களும் குறிப்பாகத் தீக்கனவுகளும் தீநிமித்தங்களும் மிகுதியாக இடம்பெறுகின்றன. அவை பின் நிகழ்வனவற்றை முன் அறிவுறுத்தித் தடுப்பனவாகன அமைந்தாலும் அவற்றை மீறலும் அதனால் அழிதலுமாகிய நிகழ்ச்சிகள் பரவலாகச் சித்திரிக்கப்படுகின்றன.
        சிலப்பதிகாரத்தில் கண்ணகிää கோவலன்ää கோப்பெருந்தேவி ஆகியோர் காணும் கனவுகள் இடம்பெறுகின்றன. அனைத்தும் தீக்கனவுகளாகää பின் நிகழவிருக்கம் அழிவினை முன் உணர்த்து வனவாக உள்ளன. தீக்கனவு கண்டும் கோவலன் அதைப் பொருட் படுத்தாது கண்ணகியின் சிலம்பினை விற்கச் சென்று கொலைப் படுவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
        கண்ணகியின் சிலம்பினை விற்கம் நோக்குடன் கோவலன் ஆயர்பாடியைக் கடந்து தெருவில் செல்லும்போது ஏறு ஒன்று அவனை எதிர்த்துப் பாய்கிறது. ஏறு எதிர்தலை ஆயரன்றி வணிகக் குலத்தவர் தீநிமித்தமாகக் கொள்ளார். அதனால் கோவலன் அதனைப் புறக்கணித்து நீங்கனாலும் பாண்டிய மன்னனால் பழி சுமத்தப் பட்டுக் கொலைப்படுவதாகச் சிலப்பதிகாரம் உரைக்கிறது. அவ்வாறே மாதரி மனையிலும் அரண்மனையிலும் அழிவை முன்னுணர்த்திச் சில தீநிமித்தங்கள் நிகழ்ந்தனவற்றைக் கூறுகிறது.

    சிலம்பில்தான் முழுக்க முழுக்க நாட்டுப்புற இலக்கியச் செல்வாக்கைக் காண்கிறோம். சிலப்பதிகார மங்கல வாழ்த்தும் கானல் வரியும் வேட்டுவ வரியும் ஆய்ச்சியர் குரவையும் குன்றக் குரவையும் வாழ்த்துக்காதையும் அக்கால மக்கள் வாய்மொழியாக இசைத்த பாடல்களை நமக்கு நினைவூட்டுகின்றன.
    தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கேற்ப இயற்கை வழிபாட்டை நினைவூட்டும் வகையில் இளங்கோவடிகள் ஞாயிறு போற்றதும்ää திங்கள் போற்றதும் என்று கூறுகிறார். தமிழகத்தின் இயற்கை வழிபாடு தைத்திருநாளே இதனால் தான் கதிரவனை வழிபடும் விதமாக பொங்கள் விழா கொண்டாடுகிறோம் இதனைத் தான் ஞாயிறு போற்றதும் என்று கூறுகிறார். இது நாட்டார் வழக்காற்றில் அடிப்படையான கருத்தாகும்.
    ஞாயிறு போற்றதும் திங்களைப் போற்றதும்’ போன்றவை நாட்டுப்புற மக்களின் இறைவழிப்பாட்டை உணர்த்துகின்றன. சிலம்பு வரிப்பாடல்கள் நாட்டுப் பாடலே …………