‘குடி குடியைக் கெடுக்கும்!’ என்று
‘பிழையில்லாமல் அச்சடிப்போம்!’
- முனைவர் கரு.முருகன்
உலக மானுட சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழனுடைய பண்பாடுää நாகரீகம்ää கலாச்சாரம் இவையெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல சமீபத்திய நிகழ்வுகளான மூன்று வயது குழந்தைக்கு மதுபுகட்டலும்ää பதின்மவயது மாணவியின் மதுத் தாண்டவமும் நம்முடைய பண்பாட்டுச் சீரழிவை உலகிற்கு உணர்த்தத் தொடங்கி விட்டன. நம்முடைய கலாச்சாரம் எல்லாம் தேர்விற்கு எழுதும் ‘வினா-விடைக் குறிப்புக்களாகவே’ நாம் பார்க்கிறோமே தவிர நம்முடைய வாழ்வியல் என்பதனை மறந்து போய் இருக்கிறோம்.
மழலைக்கு மதுவை புகட்டியதோடுää அதில் தொழில் நுட்ப வசதி நுணுக்கங்களை புகுத்தி ரசிப்பதைத் தினசரி வழக்கத்துள் இவையும் ஒன்று என வாழ கற்றுக் கொண்டு விட்டோம். மதுவை தொடுவதே தவறு என்கிற சமூகப் பண்பாட்டை இளையோர் சமூகத்திற்கு புத்தி புகட்ட கல்வி வழியிலும் மறந்து போய்விட்டோம். ஆட்சி மாறுகின்ற பொழுது ஆட்சியாளர்களின் தலைவர்களைப் பாடப்புத்தகத்தில் பதிப்புரிமை செய்யவே முன்னுரிமை தந்து சமூகப் பண்பாட்டுக் கல்வியினை பதிப்பு செய்ய பக்கங்களுக்கு இடம் தராமலே போய்விட்டார்கள். பள்ளி மாணவி மது அருந்தியதை படங்களுடன் கூடிய வசதிகளை நாம் தகவல் பகிர்வு பொருளாகவே பதிவு செய்ய அலைகிறோம். மாணவி ஒருவர் மட்டும் என இவற்றை புறம் தள்ளி விட முடியாது. காலையில் பள்ளிக்கோää கல்லூரிக்கோ செல்வதாகச் சொல்லிவிட்டு ஊரில் ஒதுக்குப்புற மரத்தடியிலும்ää மதுக்கடைகளிலும் மயக்கமாய் மாலை நான்கு மணி வரை காத்துக் கிடக்கும் பெரும்பாலான மாணவர் சமூகத்தின் வாழ்வினை பெற்றோர் மட்டும் தான் கவனத்தில் கொள்ள வேண்டுமா? என்கிற கேள்விக் கணைகள் மனதை பாரமாய் அழுத்துகிறது. ‘கல்தோன்றா மண்தோன்றா காலத்தே முன்; தோன்றிய மூத்தகுடி’ என்கிற வரிகளை மாணவ இளையோர் தவறாக பொருள் புரிந்துக் கொண்டனரோ? என்கிற பொருளைத் தற்கால நிகழ்வுகள் வழியாக தந்து கொண்டிருக்கின்றன. உலக இலக்கியத்திற்கு அறவழி இலக்கியம் அமைத்த வள்ளுவப் பெருந்தகைää தன் பணத்தை கொடுத்து தனக்கே ஊறு செய்யும் மதுவினை
“கையறி யாமை யுடைத்தே பொருள்கெடுத்து
மெய்யறி யாமை கொளல்”. (குறள்: 925)
என குறளாலும் சாடுகிறார். உலகப் பொதுமறை தந்த வள்ளுவன் 133 அதிகாரங்களுள் கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத்தில் மதுவின் தீமையினை விளக்கி உலக இலக்கியத்துள் மது ஒழிப்பினையும்ää நல்லொழுக்க இலக்கியமாக மாற்றி அமைத்தார். எதையும் மன்னிக்கும் குணம் கொண்டவள் அன்னை. அந்த அன்னை கூட மன்னிக்க மாட்டாள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல்ää மன்னிக்கக்கூடாது என உத்தரவினை உலகிற்கு அறிவிக்கின்றார். நாகரீகத்தால் பண்பட்டு வாழ்ந்த தமிழ்ச் சமூக இளையோர் மது ஒரு நாகரீக கலாச்சாரம் என நாணிக்குனியும் நாகரீகத்தில் ஆட்பட்டுக் கொண்டனர்.
மதுவினை ஒழிப்பதற்காக தன் உயிரை தியாகம் செய்யும் காலத்தில் நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகச் செம்மொழிகளில் தமிழ் முதன்மையானது என உலகிற்கு அறிவுறுத்துவதற்கு நம்முடைய பண்பாடும்ää கலாச்சாரமும் அடிப்படைக் கூறுகள் ஆகும். ஆனால்ää மது என்கிற மாயைக் கலாச்சாரத்தால் ஆண்மைக்குறைவுää நரம்புத்தளர்ச்சிää கணைய அலர்ஜிää குடற்புண்ää இருதய நோய்
உழவுத் தொழிலே நாகரீகத்திற்கு அடிப்படை ஆகும் என்கின்றனர் ஆய்வாளர்கள். மண்ணைத் திருத்திய மனிதன் தானும் திருந்தினான். தான் வாழ்ந்த இடத்தை திருத்திய மனிதன் நகரமாக்கினான்ää நாகரீகத்தை பண்பாடு சிதையாமல் வடிவமைத்தான். இன்றளவிலும் கிராம வழக்காற்றுச் சொல்லாக இருக்கிறää ‘அவருக்கு நிலபுலம் இருக்கிறதா?’ என்கிற சொல் பல்வேறு பொருளை தாங்கி இருக்கிறது. நிலம் என்பதன் பொருள் அனைவருக்கும் தெரியும். புலம் என்பது நிலத்தையும் குறிக்கும் (வருவாய்த்துறை நிலஅளவேடுகளில் புலஎண் என இன்றும் குறிக்கப்படுகிறது) உள்ளத்தையும் குறிக்கும். நிலத்தில் விளையும் பயிருக்கு இடையே களைகள் வளர்வது இயற்கையே. அந்த களையினை பயிர் நன்றாக வளர்ந்து பலன் தர வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் வளரää வளர அந்த களையினை அகற்றி எறிய வேண்டும். இதனை ஆங்கிலத்தில் உரடவiஎயவநன டயனெஇ ரnஉரடவiஎயவநன டயனெ என்பர். திருத்தம் பெற்ற உள்ளமும்ää நிலமும் வளர்ச்சி அடையும். ஒரு மனிதன் செல்வத்தை மட்டும் வைத்து (பண்டைய காலத்தில் நிலத்தின் அடிப்படையிலேயே செல்வந்தர் நிர்ணயிக்கப்பட்டனர்.) தமிழ்ச்; சமூகம் மனிதனாக ஏற்றுக் கொண்டது இல்லை. புலம் என்கிற உள்ளத்தில் பண்பாடுää கலாச்சாரம் சார்ந்த சமூக வெளிப்பாட்டினை வைத்தே முடிவு செய்தனர். பண்பாடுää நாகரீகம் என்கிற சொல் உள்ளச் செம்மையை சுட்டுகிறது.
பண்பெனப்படுவது எது? என்ற வினாவிற்கு கலித்தொகையில் ‘பாடறிந்து ஒழுகலாகும்’ என வரையறை செய்கிறது. அதாவது பிறர் மனம் புண்படாதவாறு தனது வாழ்வினை அமைக்க வேண்டும் என்கிறது. ஆனால் பிறர் மனம் எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் பெற்றோருடைய மனமாவது புண்படாத வகையில் கல்வி பயிலும் இளையோர் சமூகம் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் மாணவனின் புற வளர்ச்சியை மட்டுமே பெருமையாக பேசி மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டும்; சந்தோஷம் அடைவதையே மாதஊதியமாக எடுத்து கொள்ளக் கூடாது. மாணவனுடைய அகவளர்ச்சியினை பெற்றோர்கள் மதிப்பெண்ணாக கருதவேண்டும். ஆசிரியர் தரும் வினா-விடை மதிப்பெண்ணைää அக வளர்ச்சி மதிப்பெண்ணுக்கு அடுத்த நிலையில் வைக்கவேண்டும். அக வளர்ச்சிதான் பண்பாட்டின் ஆணி வேர் ஆகும். மாத்யூ அர்னால்டு என்கிற மேலைநாட்டு அறிஞர்ää “ஒருவன் தன் குணநலன்களை நிரப்புவதிலும்ää தன்னை சூழ்ந்துள்ள சமுதாயத்தின் நலன்களை பேணுவதிலும் பேரவாக் கொண்டிருக்கும் நிலை பண்பாடு” என்கிறார்;. இந்த பண்பாட்டின் வழியாக தான் அறிவுää கல்விää ஆன்மீகம்ää சமூக வளர்ச்சி உள்ளிட்ட எல்லாம் அமையப் பெறுகின்றன.
இன்றைய நாகரீக உலகில் தமிழரின் பண்பாடுää நாகரீகம்ää கலாச்சாரம் எல்லாம் சங்க காலத்து எச்ச பொருளாகவும்ää அதன் மீது மேலைநாட்டு மோகம் விரவியும் பரவியும் விஷமாய் சங்கமித்துக் கொண்டிருக்கின்றன. அரசு மற்றும் அதை சார்ந்த துறைகளும்ää மக்கள் கடவுளாய் மதிக்கின்ற நீதிமன்றங்களும் இவ்விசயங்களை ஏன் பொது நல வழக்குகளாக எடுக்க மறுக்கின்றன? மனமும்ää பணமும் இருந்தால்; தண்டனை பெற்ற ஒருசிலர் ஒரே நாளில் பிணையத்தில் வெளியில் வர வாய்ப்புக்கள் இருக்கின்ற பொழுதுää இது போன்ற சமூகப் பிரச்;சனைகள் பொதுநல வழக்காக மன்றத்திற்கு வராமலே விவாதப்பொருளாக மட்டுமே இருக்கின்றன.
அரசாங்கத்தின் நிதி நிலைமைக்கு மதுக்கடைகளின் வருமானமும் ஒரு காரணம் என்கிற வாதத்தை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமணம் என்றால் மாப்பிள்ளைக்கு கடிகாரமும் மோதிரமும் போட வேண்டும் என்ற நிர்பந்த பேச்சுக்கள் இருந்தன. செல்போன் வந்த பிறகு கடிகாரம் கேட்கவுமில்லை கையில் கட்டவும் பெரும்பாலானோர் மறந்து போனார்கள். செல்போன் வந்ததால் மனக்கணக்கும் மறந்து கால்குலேட்டர் காணாமலே போய்விட்டது. அதேபோல் மதுக்கடை வருமானத்தை கவனத்தில் கொள்ளாமல் மதுக்கடைகளை மூடி விட்டு கடுமையான சட்டங்களால் இளையோரை மதுவை நாட விடாமல் குறிப்பாக கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை நல்வழிபடுத்த ஏன் மாற்றுவழி வருமானத்தை பெருக்க யோசிக்க மறப்பது ஏன்?.
கட்டணம் அதிகமாக செலுத்தி பிள்ளையை படிக்க வைத்தால் தான் உயர்ந்த கல்வியாக (உயர்குடிக் கல்வி) அல்லது உயர்கல்வியாக பெருமைகொள்ளும் பெற்றோரை தமிழ்; கூறும் நல்லுலகம் வறுமைக்கோடு இல்லாமல் அதிகமாகவே பெற்றுள்ளதால் இதுபோன்ற சமூகத் தொழுநோய்; கவனிப்பாரற்று இருக்கிறது. இதனைக் காரணம் காட்டி சமூகச் சிந்தனையாளர்கள் ஒதுங்கியும் விலகியும் இருத்தல் கூடாது. பழைய பென்சன் முறையை ரத்து செய்து விட்டுää புதிய பென்சனை அரசு இயந்திரம் கொண்டு வந்த பொழுது ‘போராட்டம்’ என்கிற கோஷங்களோடு புதிய பென்சன் திட்டத்தை ஏற்றுகொண்டது போல மதுக்கடையை திறப்போம்! ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்கிற வாசகத்தை பிழையில்லாமல் மதுபாட்டில்களில் அச்சடிப்போம்’ என்கிற அரசு மதுஒழிக்கும் ஆர்வம் மட்டும் போதாது.
தமிழர் வாழ்வியலில் காதல்ää வீரம்ää இல்லறம்ää துறவறம்ää நட்புää செய்நன்றிää புகழ்ää மானம்ää ஈகைää கண்ணோட்டம்ää ஒப்புரவு ஆகிய கோட்பாடுகள் தமிழனுக்கே உரிய பண்பாட்டுக் கூறுகளாக இருந்தன. ஆனால் பண்பாடு துறந்த மதுவால் மயக்கமுற்ற இளையோர் சமூகத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த பெற்றோர்ää அரசுநிர்வாகம்ää நீதிமன்றங்கள் (எத்தனையோ நல்ல விசயங்களுக்கு பொதுநல வழக்காக கருதி தாமே முன்வந்து வழக்காக பதிவு செய்து தீர்ப்புக்கள் வழங்கியிருப்பதை அனைவரும் அறிந்ததே)ää சமூகநல ஆர்வலர்கள் இன்னும் அமைதிகாப்பது ஏனோ புரியவில்லை. உலக இளையோர் மனிதவளம் இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது என பல்வேறு நாடுகளில் கணக்கெடுப்புக்கள் வரையறை செய்கிறது. ஆனால் இளையோர் மனித வளத்தை மதுவால் மாய்த்துக் கொண்டிருக்கிறோம். பிறப்பு முதல் தொடங்கி இறப்பு வரை மதுவில்லா விருந்து இல்லை என தமிழ் சமூகம் தற்பொழுது ஏற்றுக் கொள்ள ஆரம்பி;த்துவிட்டது. பண்பாடு என்னும் தாய்பாலினை புகுட்டாமல்ää மது என்கிற புட்டிப்பாலை புகட்டி கொண்டிருக்கிறோம்.
தமிழ் மொழி தொடங்கிய காலத்தினையும்ää அது பண்பாடோடு வளர்ந்த விதத்தினையும் ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ் பண்பாட்டு மன்றங்களாக செயல்பட ஆக்கம் தரவேண்டும். பள்ளிää கல்லூரிகளில் நடைபெறும் கலை விழாக்களில் ஆடம்பரம்ää ஆடை குறைப்பு இல்லாத சமூகப்பண்பாட்டு விழாக்களாக அமையப்பெற வேண்டும். பேச்சுää கட்டுரைää கவிதை இவைபோன்ற இலக்கிப் போட்டிகளில் அனைத்து மாணவர்களும் கட்டாயமாக பங்குபெற வேண்டும் என்கிற நிலையில் போட்டி தேர்விற்காக அல்லாமல் பண்பாட்டு மாறுதலுக்காக நடத்தப்பட வேண்டும்.
முனைவர் கரு.முருகன்ää (தலைவர் 2014-15ää ரோட்டரி சங்கம்ää தேவகோட்டை)
உதவிப்பேராசிரியர்ää
தமிழ் உயராய்வுமையம்ää
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரிää
தேவகோட்டை 630 303.
சிவகங்கை மாவட்டம்.
தொடர்புக்கு அலைபேசி எண்: 94434 66564
மின்னஞ்சல்: prof.karumurugan@gmail.com

No comments:
Post a Comment