Monday, 5 October 2015

நாட்டார் வழக்காற்றில் சிலப்பதிகாரம் - முனைவர் கரு.முருகன்

முன்னுரை:
தொடக்க காலத்தில் மனித உணர்வு பட்டறிவால் பதப்பட்டும்ää பட்டை தீட்டப்பட்டு வந்துள்ளது. பட்டறிவே மனித மனத்தை ஒழுங்கு செய்யும் உன்னத கருவியாக உள்ளது. ஆதிகாலத்தில் மனிதன் பின்னிப்பிணைந்தே வாழ்ந்து வந்தான். உணர்ச்சிகளின் உயிரோட்டங்களே மானிடவியல் வளர்ச்சி ஆகும். மானுட சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியே ஆய்வு என்பதன் தொடக்கமே நாட்டார் இயல் ஆய்வு ஆகும். அவ்வாய்வு 19 ஆம் நூற்றாண்டிலே முதன்மைபெற ஆரம்பத்துவிட்டன. ஆனால் நாட்டார் வழக்காற்றின் கட்டமைப்பின் அடிப்படையில் இலக்கியங்கள் உள்ளவை என்பதனின் தேடலே ‘நாட்டார் வழக்காற்றில் சிலப்பதிகாரம்’ ஆகும்.
நாட்டாரியல் - (மரபு அறிவியல்)
    “நாட்டார்” என்ற கலைச்சொல்லை வரலாற்று அடிப்படையில் குழடம என்ற ஆங்கிலச் சொல்லின் மாற்றீடு (வுசயகெநசநnஉந) ஆகும். நாட்டுப்புற மக்களின் பண்பாடு சார்ந்த ‘தொல்சீர் செந்நெறி’ (ஊடயளளiஉயட) என்பர் ஆய்வாளர்கள். நாட்டார் வழக்காறு என்பது மனிதவியல் (ர்ரஅயnவைநைள) சார்ந்த தொல்பெருமை ஆகும். பேராசியர் லோறி ஹொன்கோ (டுயரசநை ர்ழமெழ)இ முதலாம் பின்னிஷ் போன்ற அறிஞர்கள் ‘குழடமடழநெ’ குழடழமழசளைவiஉள எனவும்ää மரபு அறிவியல் (வசயனவைழையெட ளநநைnஉந) எனவும் அறிஞர்கள் வகைப்படுத்துவர். இலங்கையில் 1980 இல் ‘யாழ் பல்கலையில் தமிழ்த்துறை ஒழுங்கமைப்புச் செய்த கருத்தரங்கில்’ குடழமடழசந நாட்டார் வழக்காற்றியல் என மொழிபெயர்ப்பை உறுதி செய்ததை சான்றுகளால் அறியமுடிகிறது.
    இங்கு மரபு அறிவியல் என்கிற நாட்டாறியல்
•    பண்பாடு
•    இலக்கியம்
•    நுண்கலைகள்
•    நுட்பம்
இன்னும் பிற இவை மக்களின் வேட்கைகளை தணிக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்கள்ää மொழிää வாய்மொழி இலக்கியம்ää பாட்டுää இசைää ஆடல்கள்ää உணவுää உறையுள்ää நம்பிக்கை சார்ந்தவை என்பன நாட்டாரியல் ஆகும்.
நாட்டார் வழக்காற்றில் சமயவுணர்வுää சமுதாய வாழ்வுää நம்பிக்கைகள்ää பழக்க வழக்கங்கள்ää உறவு முறைகள்ää உணர்ச்சிக்கூறுகள்ää என உள்ளடக்கியவை. நாட்டார் வழக்காறு என்பது வாழ்க்கைää அறிவுää மனம் என்ற நிலைகளைக் கொண்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்த மட்டில் சமய உணர்வை மையப் படுத்தியே கலைகள் பெரும்பான்மையாக உள்ளன. நாட்டார் வழக்காற்றுக் கலைகளாக பாடல் (இசை) ஆடல் (நடனம்) கூத்து (நாடகம்) ஓவியம்ää கல்ää சுதைää மண் சிற்பம்ää கட்டிடக்கலை இவையோடு இன்னும் பிறவும் சாதி சமயப் பிரிவுகளின் பயனாக மக்களின் பழக்க வழக்கத்திலும் நம்பிக்கையாலும்ää பண்பாடிலும் வேருன்றி உள்ளன. காலச்சுழற்சியின்ää காரணமாக தமிழகத்தில் மேலை நாட்டு வழக்காறுகல் வந்து இருக்கலாம். ஆனால் தமிழுக்கே உரிய நாட்டார் வழக்காற்றியல் கலை முதற்கொண்டு வாழ்வியல் கட்டமைப்பில் பின்னிப்பிணைந்துள்ளன.


சிலப்பதிகாரம்
    சிலப்பதிகாரம் சங்கம் மருவிய காலத்தில் கி.பி.300-லியிருந்து. கி.பி 700-வரையறுக்கப்பட்டு உள்ளது. சிலம்பின் வழியான அதிகாரத்தை சுட்டப் பெறுவதால் சிலப்பதிகாரம் என அமையப்பெற்றது என்பர். சிலப்பதிகாரத்தை  தொன்று தொட்டு அல்லது தலைமுறை தலைமுறையாக என உரைக்கும் பொழுதுää சில தலைமுறை தொடர்பான ஒழுக்கம் எனப் பகுக்கலாம். இதில் சிலப்பதிகாரம் என்பது நாட்டார் வழக்காறு என்கிற நாட்டுப்புறக்கதையில் உள்ள உணர்ச்சியும்ää தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான உள்ளுறையாக உளப்பகுப்பாலான மெய்ஞானம் முதன்மை பெறுகிறது.
    தமிழனுடைய பண்பாடு கலாச்சாரம் எல்லாம் கிராமக் கட்டமைப்பாலே இன்னும் உணர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழிசை நாட்டுப்புற இசையின் அடிப்படை ஆகும். தொல்காப்பியத்தில் இந்த தமிழிசைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும் தமிழிசையே முதன்மை பெற்று காப்பியப் போக்கை கையாளுகின்றன.
நாட்டார் வழக்காற்றில் சிலப்பதிகாரம்
சங்க இலக்கியத்திற்கு அடுத்த நிலையில் இசை பரந்து காணப்படும் இலக்கியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலம்பின் ஆசிரியர் கற்றுணர்ந்த பண்பாட்டு மாமேதை என்பதால் நாட்டார் வழக்காற்றில் இசைää இசையோடு கூடிய கூத்துää நாடகம் இன்னும் போல்வன கலங்கரை விளக்கமாக உள்ளது. நாட்டார் வழக்காற்றில் உள்ள கதைப் பாடலை மையமாக கொண்டே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதி இருக்க வேண்டும். நாட்டுப்புற பாடல்களில் முதன்மை பெறுகிற காதல் கருப்பொருளைச் சங்க இலக்கிய ஐந்திணை அகப்பொருளும் அமையப் பெறுகிறது. இதைப் போல் சிலப்பதிகாரத்திலும் வரும்.
    கானல் வரி
    வேட்டுவ வரி
    குன்றக்குரவை
    ஆய்ச்சியர் குரவை
என்பன நாட்டார் மரபில் வரும்  இசையோடு மக்களின் வாழ்வியல் வழக்காறுகளை மையப்படுத்துகிறது.
கதை சொல்லல் ………..
காப்பியங்கள் தோன்றுவதற்கு கதைப் பாடல்களே மூலக் காரணம் என்றால் அவை மிகை ஆகாது. ஒரு நாள் சேரன் செங்குட்டுவன்ää அரசி வேண்மாள்ää மதுரைச் சங்கப் புலவரான சாத்தனார்ää அரசைத் துறந்து குணவாயிற் கோட்டத்தில் அருந்தவம் புரிந்திருந்த இளங்கோவடிகள் ஆகிய இந்நால்வரும் இயற்கையழகை நுகரத் திருசெங்குன்றத்திற்குச் சென்றனர். இக்குன்றம்ää கொடுங்கோளுர் பக்கத்தில்ää வஞ்சியின் அருகே இருக்கிறதென்பர். அக்குன்றக் குறவர் ஒருங்குகூடிää அரசனிடம் வந்து வணங்கிää அடிகளிடம்ää “பொன்மலர் பொலியும் வேங்கை மரமொன்று அதோ உள்ளது. அதன் கொழு நிழலில்ää ஒற்றை முலையிழந்த ஓர் அழகிய வீரபத்தினி நின்றாள். தேவேந்திரனைச் சார்ந்த தேவர்கள் அவள் முன் வந்து வணங்கிää அப்பத்தினியின் கணவனை அவளுக்குக் காட்டினர். உடனே அவளுடன் அனைவரும் எமது கண்காண விண்ணகம் சென்றனர்.” என்ற ஓர் அதிசயச் செய்தி சொன்னார்கள். இச்செய்தி கேட்ட சேரன் வியந்துää அப்பத்தினியின் முழு வரலாற்றையும் அறிய அவாவினான். “ அப்பத்தினிக்கு விழைந்ததை யான் அறிவேன்” என்று மதுரைப் புலவர் சாத்தனார் விளம்பலானார். நாட்டுப்புறங்களில் கண்ணகி கதை கூத்தாகி ஆடப்பட்டு வந்தது. அந்தக் கூத்தினை 1948 இல் ரா.பி.சேதுப்பிள்ளை பதிவு செய்துள்ளார். தமிழ் இன்பம் என்னும் நூலில் ‘கண்ணகிக் கூத்து’ என்னும் கட்டுரையில் இதனைப் பதிவு செய்குள்ளார். முதன் முதலில் கண்ணகி கூத்தினை விமர்சனம் செய்த ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் சிலப்பதிகாரத்திற்குப் பின் வழங்கி வரும் நாட்டுப்புறக்கதை எனும் கோணத்திலேயே அக்கூத்தினை அணுகியுள்ளார். சிலப்பதிகாத்தோடு ஒப்பிட்டுää அக்கூத்து இலக்கியத்தின் வடிவத்தில் சிதைந்திருப்பதைப் குறித்துள்ளார்.
இந்த கதைச் சொல்லல் வழியாகத் தான் சிலப்பதிகாரக் காப்பியம் தோன்றியது என்றால் நாட்டார் வழக்காற்றின் மூலக் கருவாகும்.
கானல்வரி
    கிராமப்புறங்களில் இன்னும் வழக்கங்களில் உள்ள பண்டிகைக் கால விழாக்களில் கும்மி முதலான நாட்டார் வழக்காறுகளி;ல் தங்கள் எண்ணக்கருத்துகளை இலைமறை காயாக வெளிபடுத்துவது வழக்கம். இந்த நிலையிலே கானல்வரி அமையபெற்றுள்ளது.
    ‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை அது போர்த்துக்
    கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி
    கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
    திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி’
    என மனக்கருத்தினை மையப்படுத்தி இளங்கோவடிகள் வெளிப்படுத்துகிறார்.
குரவைக் கூத்தினையும் அது ஆடும்போது பாடும் வாய் மொழிப் பாடலாக அமையப்பெறுகிறது. குரவை என்பதனைää   
    ‘குரவை என்பது எழுவர் மங்கையர்
    செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து
    அந்நிலைக் கொட்ப நின்றாட லாகும்’
என்றும் விளக்கியுள்ளார் அடியார்க்கு நல்லார். கானற் பாணியே நாட்டுப்புறப்பாடல்தாம் என்பர் அ.மு.ப. வாழ்த்துக்காதையில் அம்மானைää கந்துக வரிää ஊசல் வரி முதலிய பல நாட்டுப்புற விளையாட்டுகள் இடம் பெற்றுள்ளமையையும் குறித்துள்ளார்.
எசைப்பாட்டு
சிலம்பில் வினா-விடை என்ற பொதுக் கூற்றிலும் கதை நிலைக் கூற்றாகவும்ää தமிழிசையில் முரிவரிப் பண் என்கிற அதாவது முறித்து பாடுதலே எசைப்பாட்டு என்கிற எதிர்ப்பாட்டு ஆகும்.
கோவலன் பாடுகிறான்
    பொழில்தரு நறுமலருர புதுனணம் விரிமணலே
    பழுதரு திருமொழியே பணைஇள வனலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில் இணையே
எழுந்தரும் பின்னிடையே எனையிட செய்வதையே
                                  என்கிறான்.
அம்மானைவரி
அம்மானை என்பதற்குத் தாய்ää தலைவிää ஆடுங்கருவிää தீ என்ற பொருள் உண்டு. கலம்பலக உறுப்புää வரிப்பாடல்ää பெண்பால் பிள்ளைத் தமிழ் உறுப்பு என்ற நிலையிலும் அமைகின்றது. பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானைää அவ்விளையாட்டின் போது பாடப்படும் பாடல் அம்மானைவரிää அவ்விளையாட்டில் பயன்படுத்துவது அம்மானை காய்ää அம்மானைபாட்டு கதைப் பாடலைக் குறிக்கும்.”
தமிழில் அம்மானை என்ற சொல்லுக்குப் பொருள் கதைப் பாடல் எனவும் பொருந்தும். அம்மானை என்ற சொல் சிலப்பதிகாரத்தில் தான் முதலில் கையாளப் பட்டுள்ளது.
“வீங்கு நீர் உலகாண்டு விண்ணவர்கோன்
ஓங்காணங் காத்த உரவோன்யார் அம்மானை
ஓங்காணங் காத்த உரவோன் உயர்விசும்பல்
தூங்கையில் மூன்நெறிந்த சோடின்காண் அம்மானை
சோடின் புகாத்நகரம் பாடலோர் அம்மானை”
பெண்கள் விளையாடும் விளையாட்டு அம்மானை. அவ்விளையாட்டில் பயன்படுத்துவது அம்மானைக்காய். அம்மானைப் பாட்டு என்பது கதைப்பாடலையும் குறிக்கும். மகளிர் இருவர் வினா விடையாக இரு பொருள்படப் பாடுவது அம்மானை மடக்காகும்.
        “அம்மானை தம்கையில் கொண்டு அங்கு அணியிழையார்
         தம்மனையில் பாடும் தகையேலோர் அம்மானை”
என்றும்ää அம்மென் புகார் நகரம் பாடேலோர் அம்மானை என்றும் பாடியுள்ளார்.
இசை
    கோவலன் மாதவி பிரிவான கானல்வரி சிலம்பின் முக்கிய பகுதியாகும் நாட்டார் இசையில் அக அழகே காதலில் முதன்மைப் பெறுகிறது. ஆனால் முக அழகு என்பது காதல் அல்லாக் காமமாகும் என வாழ்க்கை என்பதையே உணர்த்தி நிற்கும். “யாழ் ஏறி வந்த ஊழ்”- என்கிற அந்தக் கானல் வரி கிராமிய இசையான எசைப்பாட்டு என்ற கட்டமைபில் அமைக்கப்பட்டு உள்ளது.
    கானல் வரி
    வேட்டுவ வரி
    குன்றக்குரவை
    ஆய்ச்சியர் குரவை
    ஊர்சூழ் வரி
    வாழ்த்துக் காதை
ஆகிய ஆறுமே நாட்டார் இசையின் தொகுப்பாகும்.
நாடகம் அல்லது கூத்து
தொல்காப்பியம் கூறும் நாடக வழக்குää உலக வழக்குää என்பதில் நாடக வழக்கு என்பது அடித்தட்டு மக்களின் பிரதிபலிப்பு ஆகும். சங்க இலக்கியத்தில் வரும் வெறியாட்டு சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியக் குரவைää குன்றக் குரவைää வேட்டுவவரி ஆகியவை ஆகும். தமிழ் நாடகங்களைப் பொருத்தமட்டில் பழந்தமிழ் உரையாசிரியர்கள்
    வேதியல் (அரசர்ää அவரோடு ஒத்தவர்)
    பொதுவியல் (பொதுமக்கள்)
எனப் பகுப்பார்
சிலப்பதிகாரம் உரையாசியர் அவர்களுக்கு நல்லார் நாடகம் அல்லது கூத்து என நுட்பமாகப் பகுக்கிறார்.
“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
 பல வகைக் கூத்தும் விலக்கினில் புணர்ந்து
 பதினோர் ஆடலும்ää பாட்டும்ää கொட்டும்ää
 விதிமாண்கொள்கையின் விளங்க அறிந்து- ஆங்கு
 ஆடலும் பாடலும்ää பாணியும்ää தூக்கும்ää
 கூடிய நெறியின் கொளுத்தும் காலை-
 பிண்டியும்ää பிணையலும்ää எழில் கையும்ää தொழில்கையும்ää
 கொண்டவகை அறிந்துää கூத்து வரு காலை
 கூடை செய்த கை வாரத்துக் களைதலும்ää
 பிண்டி செய்த கை ஆடலில் களைதலும்ää
 ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்ää
 குரவையும் வரியும் விரவல செலுத்தி
 ஆடற்கு அமைந்த ஆசான் - தன்னோடும்”
-    (சிலப்பதிகாரம் - அரங்கேற்றுக்காதை – 12-25 வரிகள்)
கூத்தின் வகையினை கீழ்காணுமாறு வகைப் படுத்துகிறார்ää
    வகைக் கூத்து
    புகழ்க் கூத்து
    வரிக் கூத்து
    வரிசாந்திக் கூத்து
    சாந்திக் கூத்து
    விநோதக் கூத்து
    ஆடைக் கூத்து
    தமிழ்க் கூத்து
    இயல்புக் கூத்து
    தேசிக் கூத்து
எனப்பத்தாக வகைப் படுத்தலாம்.
ஒப்பாரி
தமிழர் பண்பாட்டில் இன்று வரை நாட்டார் வழக்காற்றில் கையாளப் பெறுவது ஒப்பாரிப் பாடல் ஆகும். இது இசையோடு கூடிய முகாரி ராகச் சாயலுடன் அமையப் பெறுவது ஆகும். தாய்ää தந்தைää கணவன்ää பிள்ளைää உற்றார்ää உறவினர் இறந்து விட்டாலோää அல்லது தாழத துயரம் அடைந்து விட்டாலோ உள்ளதில் அடக்க முடியாத துன்ப உணர்வை வெளிக்காட்ட ஒப்பாரிப் பாடப் பெறுகிறது. 
கணவனைப் பிரிந்த பத்தினியான கண்ணகி நிலைமையென்ன? கலக்கம்! துன்பம்! துன்பம்! இதை இளங்கோவடிகள் அந்திமாலை சிறப்புக் காதையில்ää
    “அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழியää
    மென்றுகில் அல்குல்ää மேகலை நீங்கக்
    கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
    மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்
    கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்.
    திங்கள் வாண்முகம் சிறுவியர் பரியச்ää
    செங்கயல் நெடுங்கண் அஞ்ச மறப்பப்
    பவள வானுதல் திலக மிழப்பத்
தவள வாணகைää கோவல னிழப்ப
மையிருங்கூந்தல்ää நெய்யணி மறப்பக் 
     கையறு நெஞ்சத்து கண்ணகி…”  
    சேவடி சிலம்பிழந்தது. மெல்லிய ஆடையணிந்த இடை மேகலையிழந்தது. கண்ணகி கொங்கையிற் குங்குமம் எழுதாள். மங்கல அணி தவிர வேறணி விரும்பாள். காதிற் குழையில்லை. மதிமுகத்தில் சிறு வியர்வை பிரிந்து. கண்ணில் அஞ்சனம் இல்லை. நெற்றியிற் பொட்டில்லை. அவளது வெண்ணகைää கோவலனை யிழந்து மங்கியது.  கூந்தலுக்கு நெய்தடவி வாரவும் மறந்தாள். மனமுடைந்து கவலைபெருகிää நாயகனையே நினைத் தேங்கினாள் என கண்ணகியின் நிலையை ஒப்பாரியில் துன்ப உணர்வை வெளிப்படுத்துகிறார்.
கனவுகளும் நிமித்தங்களும்
        கதைப் பாடல்களில் கனவுகளும் நிமித்தங்களும் குறிப்பாகத் தீக்கனவுகளும் தீநிமித்தங்களும் மிகுதியாக இடம்பெறுகின்றன. அவை பின் நிகழ்வனவற்றை முன் அறிவுறுத்தித் தடுப்பனவாகன அமைந்தாலும் அவற்றை மீறலும் அதனால் அழிதலுமாகிய நிகழ்ச்சிகள் பரவலாகச் சித்திரிக்கப்படுகின்றன.
        சிலப்பதிகாரத்தில் கண்ணகிää கோவலன்ää கோப்பெருந்தேவி ஆகியோர் காணும் கனவுகள் இடம்பெறுகின்றன. அனைத்தும் தீக்கனவுகளாகää பின் நிகழவிருக்கம் அழிவினை முன் உணர்த்து வனவாக உள்ளன. தீக்கனவு கண்டும் கோவலன் அதைப் பொருட் படுத்தாது கண்ணகியின் சிலம்பினை விற்கச் சென்று கொலைப் படுவதாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
        கண்ணகியின் சிலம்பினை விற்கம் நோக்குடன் கோவலன் ஆயர்பாடியைக் கடந்து தெருவில் செல்லும்போது ஏறு ஒன்று அவனை எதிர்த்துப் பாய்கிறது. ஏறு எதிர்தலை ஆயரன்றி வணிகக் குலத்தவர் தீநிமித்தமாகக் கொள்ளார். அதனால் கோவலன் அதனைப் புறக்கணித்து நீங்கனாலும் பாண்டிய மன்னனால் பழி சுமத்தப் பட்டுக் கொலைப்படுவதாகச் சிலப்பதிகாரம் உரைக்கிறது. அவ்வாறே மாதரி மனையிலும் அரண்மனையிலும் அழிவை முன்னுணர்த்திச் சில தீநிமித்தங்கள் நிகழ்ந்தனவற்றைக் கூறுகிறது.

    சிலம்பில்தான் முழுக்க முழுக்க நாட்டுப்புற இலக்கியச் செல்வாக்கைக் காண்கிறோம். சிலப்பதிகார மங்கல வாழ்த்தும் கானல் வரியும் வேட்டுவ வரியும் ஆய்ச்சியர் குரவையும் குன்றக் குரவையும் வாழ்த்துக்காதையும் அக்கால மக்கள் வாய்மொழியாக இசைத்த பாடல்களை நமக்கு நினைவூட்டுகின்றன.
    தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற முதுமொழிக்கேற்ப இயற்கை வழிபாட்டை நினைவூட்டும் வகையில் இளங்கோவடிகள் ஞாயிறு போற்றதும்ää திங்கள் போற்றதும் என்று கூறுகிறார். தமிழகத்தின் இயற்கை வழிபாடு தைத்திருநாளே இதனால் தான் கதிரவனை வழிபடும் விதமாக பொங்கள் விழா கொண்டாடுகிறோம் இதனைத் தான் ஞாயிறு போற்றதும் என்று கூறுகிறார். இது நாட்டார் வழக்காற்றில் அடிப்படையான கருத்தாகும்.
    ஞாயிறு போற்றதும் திங்களைப் போற்றதும்’ போன்றவை நாட்டுப்புற மக்களின் இறைவழிப்பாட்டை உணர்த்துகின்றன. சிலம்பு வரிப்பாடல்கள் நாட்டுப் பாடலே …………









No comments:

Post a Comment