Monday, 5 October 2015

சிலம்பில் முத்தமிழ்க் கோட்பாடுகள் - முனைவர் கரு.முருகன்

சிலம்பில் முத்தமிழ்க் கோட்பாடுகள்
                - முனைவர் கரு.முருகன்
    நம் தமிழ் மரபில் முத்தமிழ் என்ற வழக்கு தொன்மை காலந்தொட்டே இருந்து வருகிறது. உள்ளக்கருத்தினை உணர்த்தும் மொழி இயற்றமிழ் என்றும்ää இன்பம் கொள்ளத்தக்க இசையும் மொழி இசைத்தமிழ் என்றும்ää உடலின் இயக்கத்தால் விளக்கப்படும் மொழி நாடகத்தமிழ் என்றும்ää ‘முத்தமிழ்க் கோட்பாடு’ அறிவுறுத்துகிறது. இயற்றமிழ்ää இசைத்தமிழ்ää நாடகத்தமிழ் ஆகிய மூன்றையும் இணையான கூறுகளாக முத்தமிழ் என்ற கருத்துக்கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கிறது. முத்தமிழ் கோட்பாடு பற்றிய செய்தியினைää
    “தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னட் பொருப்பன்”
                                (பரிபாடல் திர.4)
    என்னும் பாடல்வரி மூலம் அறியலாம். மகாகவி பாரதி யாமறிந்த புலவர் என வரையறை செய்து வள்ளுவன்ää கம்பர்ää இளங்கோ எனத் தமிழ் கூறும் நல்லிசைத்துச் சுட்டிக் காட்டியுள்ளார். வள்ளுவம் என்பது வாழ்வின் இலக்கணம். கம்பரது காப்பியம் வாழ்க்கை இலக்கியம். இளங்கோவின் சிலம்பு தமிழரின் அடையாளம்.மொழியின் வளமை. காளிதாசரின் கவிப்புலமையும்ää தாந்தேயின் காதல் சுவையும்ää N~க்ஸ்பியரின் நாடகப்புலமையும் ஒருங்கே அமையப்பெற்ற முத்தமிழ் செவ்வியல் காப்பியமாகும்;.  சங்க காலத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இக்கோட்பாடு காணப்படுகிறது. 
இயற்றமிழ்:
    இயற்றமிழ் என்பது அனைத்துத் துறையிலும் இயலுகின்றதும்ää இயக்க வைப்பதும் ஆகும். உலக வழக்குää செய்யுள் வழக்கு என்னும் இருவகை வழக்கிலும் இயங்குகின்ற வசனமும்ää செய்யுளுமாகிய நூல்களின் தொகுதி. வழக்கியலும்ää வழக்கியலாற் செய்யப்பட்ட செய்யுளிலும் பற்றி எழுந்த இலக்கணம் இயற்றமிழ் என்பர் பேராசிரியர். இயற்றமிழில் இலக்கணம்ää இலக்கியம்ää செய்யுள்ää உரைகள்ää உரைநடைää புராணம் ஆகிய அனைத்தும் அடங்கும்.
    இயற்றமிழில் பல புதிய கவிதை வடிவங்களைத் தோற்றுவித்தவர் இளங்கோவடிகள்.  நிலைமண்டில ஆசிரியப்பாää மயங்கிசைக் கொச்சகக் கலிää கலிவெண்பாட்டுää பஃறாழிசைக் கொச்சகக் கலிää அயல் மயங்கிசைக் கொச்சகக் கலி முதலான பாவகைகள் சிலம்பில் இடம்பெற்று காப்பியத்திற்கு அழகூட்டுகிறது. இவற்றில் உவமைää உருவகம்ää தற்குறிப்பேற்ற அணிநலன்களும்ää கற்பனைää ஓசைää வருணனை ஆகிய இலக்கிய நலன்களும் நிறைந்துள்ளன. மாந்தர்களின் பழங்காலப் பாடல்களை நாட்டுப்புற வடிவிலேயே தம் நூலில் எடுத்து கையாண்டுள்ளார். இத்தகைய நாட்டுப்புறப் பாடல்களில் கானல்வரிää வேட்டுவவரிää ஆய்ச்சியர் குரவைää குன்றக்குரவை ஆகிய நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.    
    தமிழில் உள்ள ஓசை வகைகள் அகவலே முந்தியது. அகவலும்ää செப்பலும் மக்கள் பேச்சு வழக்கில் காணப்படுபவை. இந்த ஓசைகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் உரைநடை போன்ற அமைப்புகளிலேயே அமைந்துள்ளன. ஆகையால் செய்யுளைத்தொடர்ந்து உரைநடை எழுந்தது என்பர். இயல்கள் தோன்றிய காலத்தில் செய்யுளுக்கும்ää உரைநடைக்கும் பெரிதும் வேறுபாடு இல்லை. செய்யுளைப்போலவே உரைநடையும் செப்பமாக செய்யப்பட்ட ஒன்று. அதனால்தான் உரையினை தொல்காப்பியர் செய்யுள் வகையுள் ஒன்றாக கூறியுள்ளார். சொல் ஆளுமை என்பது இலக்கியக் கட்டமைப்பில் இயலாகப் பகுக்கப்படுகிறது. தூய சமணப் பெருந்துறவி கவுந்தியடிகளுக்கும்ää கோவலனுக்கும் நடைபெற்ற உரையாடலில் ‘மதுர தென்தமிழ் நாட்டின் புன்னிய நகரம் எனவும்ää மாசற்ற கல்வி கேள்விகளில் சிறந்த பெரியார் இருக்கின்றார்’ என்ற வரிகளால் உரை முடிகிறது. அக்கள்வனைக் கொண்டுää அச்சிலம்பினை கொண்டு வா என விளம்பியதாகää கோவலனை அவைக்கு கொண்டு வரச்சொன்னதைää மாறுதலாக பொருள் உணர்ந்ததால் காப்பியம் அமையக் காரணமாக இருந்தது.

சிலம்பில் உரைநடை
    தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தின் பதிகத்தில்
        “ வாழ்த்து வரந்தரு காதையொடு
        இவ்வா றைந்தும்
        உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்”.
    என்ற குறிப்பு வருகிறது.
    இக்காப்பியத்தின் இடையிடையே உரைநடை இடம்பெற்றுள்ளது. தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன. உரைநடை இரண்டு காரணங்களுக்காக இளங்கோவடிகள் பயன்படுத்தி இருக்கிறார்.

அவை
    1. கதை நிகழ்ச்சிகளை இணைப்பதற்காகää
    2. கதை நிகழ்ச்சிகளை விளக்கிக் காட்டுவதற்காகää
    சிலப்பதிகாரத்தில் வந்துள்ள இசைத்தமிழ்ää நாடகத்தமிழ் பகுதிகளில் உரைப்பகுதி வருவதால் முற்காலத்தில் இசைää நாடகத் தமிழிலேயே உரைநடை முதன்முதலாக கையாளப்பட்டு இருக்கிறது. கட்டுரைக்காதை என்பதை ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும்ää நூலின் இறுதியிலும் காண்கிறோம்.
        “ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம்
        முற்றிற்று
        செங்குட்டுவனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
        வஞ்சிக்காண்டம் முற்றிற்று”.
    இவற்றைக் காணும் போது உரைநடை போலவே காணப்படுகின்றன. தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தை அறிய முடிகிறது. மேலும் இசை நாடகத் தமிழில்;தான் உரைநடை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
        “ அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்:
        வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்:
        குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
        இரவிடைக் கழிதற்குää என் பிழைப்பு அறியாது:
        கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்:
        பொய்தீர் காட்சிப் புரையோய்ää போற்றி”.
    இயற்றமிழ் பற்றி இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
இசைத்தமிழ்
    இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத்தமிழ் ஆகின்றது. இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பதுää வயப்படுத்துவதுää ஆட்கொள்வது என்று பல பொருள்கள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவதுää அசைவிப்பது எனும் பொருளைத் தருகின்றது என்பர் தண்டபாணி தேசிகர். ஏழிசைää ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையே ஏழிசையாக அமைகிறது என்பதைக் காட்டுகிறது.
    தமிழர்களின் இசைக்கு இலக்கண நூலகாக சிலப்பதிகாரம் விளங்குகிறது. சங்க இலக்கியத்தை அடுத்து சிலப்பதிகாரத்தில் இசை பற்றிய செய்திகள் அதிக அளவில் காணப்படுகின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளன. இலக்கணத்தை அறிவியல் முறையில் தந்துள்ள இளங்கோவடிகளை இசை இலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.  வாழ்த்துப்பாடல்ää அங்கேற்றுக்காதைää கானல்வரிää வேணிக்காதைää வேட்டுவவரிää ஆய்ச்சியர் குரவைää துன்பமாலைää ஊர் சூழ்வரிää வஞ்சினமாலைää குன்றக்குரவைää வாழ்த்துக்காதைää ஆகியன அக்கால இசைக்கலையைப் பற்றியும்ää இசைப்பாடல் பற்றியும் விளக்குகின்றன.
    “உள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற ஐயா” எனப் பாடுகின்றபொழுதுää மாணிக்கவாசகப் பெருமான் இசை எங்கு பிறக்கிறது என்றால் இயற்கைää ஆன்மா என்ற இரு நிலைகளில் பிறக்கிறது என்று கூறுகிறார்.
    1. பஞ்சபூதம் (நிலம்ää நீர்ää காற்றுää ஆகாயம்ää நெருப்பு)
    2. தன்மாத்திரை (ஓசைää ஊருää ஒளிää சுவைää நாற்றம்)
    3. அறிபொறிகள் (மெய்ää வாய்ää கண்ää மூக்குää செவி)
    4. வினைபொறிகள் (வாக்குää கைää கால்ää கருவாய்ää எழுவாய்)
    5. உட்கரணம் (மணம்ää புத்திää சித்தம்ää அகங்காரம்)
    என்ற இந்த இயற்கையோடு எழுபத்து இரண்டாயிரம் நரம்புகளை இயக்கச் செய்வதுதான் ஆன்ம இசை.
எண்    சுரம்    எழுத்து    இடம்    தமிழ்பெயர்
1.    ச    ஆ    மிடறு    குரல்
2.    ரி    ஈ    நா    துத்தம்
3.    க    ஊ    அண்ணம்    கைக்கிளை
4.    ம    ஏ    சிரம்    உழை
5.    ப    ஐ    நெற்றி    இளி
6.    த    ஓ    நெஞ்சு    வுpளரி
7.    நி    ஓள    நாசி    தாரம்
    இசையை வெளிப்படுத்தும் விதமாக மாதவி கோட்டுமலர் புனைந்து யாழ் மீட்டுகிறாள். அப்படி தான் மீட்டுகின்ற போது எட்டு வகையில் சோதிக்கிறாள்.
    1. பண்ணல்
    2. பரிவட்டனை - நரம்பினை கரணம் செய்தல்
    3. ஆராய்தல் - சுருதி சேர்த்தல்
    4. தைவரல் - அனுசுருதி இயற்றல்
    5. செலவு - ஆலாபணம்
    6. விளையாட்டு – பாட நினைத்ததை சந்தத்தில் விடுதல்
    7. கையூழ் - வண்ணத்தில் செய்த பாடலை இசைத்தல்
    8. குறும்போக்கு – முடுக்கிசை என வரையறை செய்யப்படுகிறது
இசைக்கருவ10லம்
    சிலப்பதிகாரம் இசைக்குக் கருவூலமாக உள்ளது ஆடல் கலைக்களஞ்சியம். அதன் கதையில் ஒரு முக்கியப் பாத்திரம் மாதவி. ஆடல்ää பாடல் அழகு மூன்றிலும் சிறந்தவள். அவளது அரங்கேற்றம்ää அரங்கேற்றுக்காதை என்ற பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும்ää ஆடலாசிரியன்ää பாடல் ஆசிரியன்ää மத்தளம் கொட்டுவோன்ää யாழ் இசைப்பவன்ää ஆடும் பெண் ஆகியோருக்கு உரிய தகுதிகள் எல்லாம் கூறப்பட்டுள்ளன.
     கானல்வரிää வேட்டுவவரி ஆகியவற்றில் நாட்டுப்புற இசை பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
        “மகரத்தி னொற்றாற் சுருதி விரவும்
        பகருங் குறில்நெடில் பாரித்து – நிகரிலாத்
        தென்னாதெனா வென்று பாடுவரேல் ஆளத்தி
        மன்னாவிச் சொல்லின் வகை”.
    எனும் அடியார்க்கு நல்லார் உரையில் வரும் மேற்கோள் மூலம் அறிய முடிகிறது. மேலும் அரங்கேற்றுக்காதையில் பண்ää திறம்ää தூக்கு ஆகியன குறித்தும் ஏழு சுரங்கள் குறித்தும் பாடல்ää யாழ்ää குழல்ää தண்ணுமை ஆகிய ஆசிரியர்களின் இலக்கணங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன.
இசைத்தமிழ் நூல்கள்
    தொல்காப்பியத்தில்  இசை பற்றிய குறிப்புகள் உள்ளன.
அவைää
    1. நால்வகை நிலங்கட்குரிய பண்வகைகள்
    2. பண்களுக்குரிய பெரும்பொழுதும்ää சிறுபொழுதும்ää
    3. பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைää
    4. பாடலின் அமைப்பிற்கும்ää சிறப்பிற்கும் தேவையான எதுகைமோனை முதலிய       தொடை வகைகள்
    5. அம்போதரங்க அமைப்பு
    6. இசை எழுத்துக்களின் மாத்திரை அளவு
    7. தாள நடை வகைகள்
        இசைத்தமிழ் நூல்கள் சங்ககாலத்தில் இருந்தன என்பதை இறையனார் களவியல் உரையின் ஆசிரியர் கூற்று வலியுறுத்துகிறது. எட்டுத்தொகை  நூல்களுள் ஒன்றான பரிபாடலில் இசை தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் ஒவ்வொரு பாடல்களின் கீழும் அப்பாடல்களின் ஆசிரியர் பெயரும்ää அதற்கு இசை அமைத்தவர் பெயரும்ää அதற்குரிய யாழ்ää செந்துறைää தூக்குää வண்ணம் முதலியனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிலம்பு காட்டும் இசை
     சிலப்பதிகாரத்தில் இசைநூலால் வகுத்த எட்டு வகையான இசையின் கூறுபாட்டை மாதவி அறிந்து வைத்திருந்த செய்தியை ää
    “ பண்வகையாற் பரிவுதீர்ந்து:
    மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
    பயிர்வண்டின் கிளை போலப் பல்நரம்பின் மிசைப்படர:
    வார்தல்ää வடித்தல்ää உந்தல்ää உறழ்தல்ää
    சீருடன் உருட்டல்ää தெருட்டல்ää அள்ளல்ää
    ஏர்உடைப் பட்டடைää என இசையோர் வகுத்த
    எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
    பட்ட வகைதன் செவியின் ஒர்த்து”. (கட்டுரைக்காதை 9-15).
    வார்த்தல்ää வடித்தல்ää உந்தல்ää உறழ்தல்ää சீருடன் உருட்டல்ää தெருட்டல்ää அள்ளல்ää ஏறுடைப்பட்டடை என இசை நூலால் வகுத்த எட்டுவகையான கூறுபாட்டை இப்பாடல் விளக்குகிறது. மேலும் வேட்டுவவரியில்ää
        “குரவம்ää கோங்கம்ää மலர்ந்தன கொம்பர்மேல்
        அரவ வண்டினம் ஆர்த்து: உடன் யாழ்செய்யும்
        திருவுமாற்குஇளை யாள்திரு முன்றிலே”.
                                (வேட்டுவவரி 7: 9-11)
    வெண்கடம்பும்ää பாதிரியும்ää புன்னையும் மணம் கமலுகின்ற குரவமும்ää கோங்கமும் மலர்ந்துள்ள மரக்கொம்புகளின் மேல் ஒலி செய்யும் வண்டினம் ஆர்த்துää முழங்கி யாழிசை போல இசைக்கின்றன என்று இளங்கோவடிகள் இயற்கையின் ஓசைக்கு யாழிசையை ஒப்புமைப் படுத்தியுள்ளார்.
நாடகம்
    தொன்மம் வாய்ந்த நாட்டுப்புற மக்களின் மெய்ப்பாட்டினால் தோன்றியதே கூத்து. காலப்போக்கில் மாந்தர்களின் மொழி வளர்ச்சி மற்றும் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ப மெய்ப்பாடு நாடகமாக மாறியது. பின் இன்னதுதான் என முன்னோர்களின் வரையரைக்கு உட்படுத்தப்பட்டு நாடகமானது ஒரு முறைமையாக்கப்பட்டது. தமிழர்களின் வாழ்வியலோடு இயைந்து நாடகமானது முத்தமிழ் ஒன்றாகவும் மாற்றம் பெற்றது. ‘நாடகம்’ எனும் சொல் முதன்முதலில் தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் பயன்படுத்தியுள்ளார்.
        “நாடக வழக்கினும் உலகியல் வழக்கியும்
        பாடல் சான்ற புலனெறி வழக்கம்”.
                                    (தொல்.அகத்-53)
    இவ்வடிகளில் பயின்று வரும் ‘நாடக வழக்கு’ எனும் சொல் அக்காலத்தைய நாடகக்கலை வடிவத்தினை பிரதிபலிக்கிறää நாடக வடிவங்களை கூத்துää ஆடல் என்ற இரு வகைகளில் கூறுகிறார். இவை முறையே வள்ளிக்கூத்துää முன்தேர்க்குரவைää பின்தேர்க்குரவைää வெறியாடல்ää காந்தள்ää அமலைக்கூத்துää துடிநிலைää சுழல்நிலைக்கூத்துää பிள்ளையாட்டு முதலியன நடத்துக்கலை வடிவங்களாகும்.மேலும்ää தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் நாடகச் சுவைகள் பற்றிய குறிப்புகளைää
        “கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
        உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
        நன்னயப் பொருள்கோள் எண்ணருள் குரைத்தே”.
                                        (தொல்-மெய்-27).
இப்பாடல் தெளிவுறுத்துகிறது.
    இவற்றின் மூலம்ää நாடகம் மட்டுமே கண்ணால் காண்பதற்கும்ää செவியால் கேட்பதற்கும் காட்சிக்கலையாக விளங்குகிறது. சிலம்பில் அமைந்த முப்பது காதைகளுள்ää நான்கு காதைகளில் மட்டும் மக்களின் ஆடல்ää பாடல்களைப் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன. அரங்கேற்ற அமைப்பின் மேடையை விளக்கும் பொருட்டு
    ‘ஒரு சாண் மூங்கிலைக் கொணர்ந்து நல்ல வளர்ச்சி பெற்ற ஆளின் பெருவிரல் இருபத்துநான்கு அளவினைக் கொண்ட நீளம் எட்டும்ää அகலம் ஏழும் என வரையறை செய்யப்படுகிறது. இதில் எட்டு அனு சேர்ந்தது ஒரு தேர்த்து ஆகும். எட்டு தேர்த்து ஒரு இம்மி ஆகும். எட்டு இம்மி ஒரு நெல் ஆகும். எட்டு நெல் ஒரு பெருவிரல் ஆகும் என தமிழனின் அறிவியலோடு இணைந்து ஆக்கம் பெருகிறது. ஒருமுக எழுனிää பொருமுக எழுனிää கரந்து வரல் எழுனி என மேடை நாடக திரைச்சீலையின் வகை உணர்த்தப்படுகிறது’.
 அவை
•    கானல்வரிää    
•    வேட்டுவவரிää
•    ஆய்ச்சியர் குரவைää
•    குன்றக்குரவை.
    நாடக மேடையின் அமைப்புää தூணின் நிழல் மூன்று வகையான திரைச்சீலைகள் பற்றிய குறிப்புகளையும் சிலம்பு காட்டுகிறது.       
நாடகத்தமிழ்
    சிலப்பதிகாரத்தில் நாடகக் காப்பியத்திற்கு இன்றியமையாத உறுப்புகள் அனைத்தும் நிறைந்திருக்கின்றன. இதனால் நாடகக்காப்பியம் என்று கூறுவர். இந்நூலில் இன்பியல்ää துன்பியல் நாடகக்கூறுகள் காட்டப்படுகின்றன. பழங்கால நாடகப் பான்மையை அறிய இந்நூல் மிகவும் துணை செய்கிறது.
    இளங்கோவடிகள் சிலப்பதிகாரக் கதை நிகழ்ச்சிகளை வரலாற்றாசிரியர்களைப் போன்று வரிசையாகக் கூறாமல் இடத்திற்கும்ää பாத்திரத்திற்கும் ஏற்றார் போல் ஆங்காங்கே மாற்றியமைத்துக் கூறுவதும்ää வழக்குரைக்காதையில் அமைந்துள்ள உரையாடல் போன்ற பகுதிகளும் இதனை ஒரு சிறந்த நாடகக்காப்பியம் எனக் கூறும்படி அமைந்துள்ளது. கானல்வரி இளங்கோவடிகளின் இசை மற்றும் நாடகப் புலமைக்குச் சான்றாகும்.
நாடகக்கூறுகள்
    கண்ணகியின் பிரிவுää அவள் தன் தீயகனவுää கோவலன் கண்ட அஞ்சுவரு கனவுää அவ்விருவரும் காட்டுவழி செலவுää நீதிக்கு முரணான கோவலன் கொலைää தேற்றமுடியாத கண்ணகியின் துயர்ää கோல்கொடிய பாண்டியனின் இறுதிää கண்ணகியின் தனது இடது நிகிலைத் திருகியெறிந்து மதுரையை எரித்தது. கோப்பெருந்தேவியும் பாண்டியனோடு விண்ணகம் புக்கது போன்றவை இக்காப்பியத்தில் காணும் துன்பியல் கூறுகளாகும்.  புகார்க்காண்டம் முழுவதும் ஆங்காங்கே இன்பமே விரவியுள்ளது. துயருழந்தார் இருவரும் தேவர் புடைசூழ வானவூர்தியில் ஊர்ந்து துறக்கம் சென்றனர் என கதை முடிவு இன்பம் தருவதாய் அமைந்துள்ளது.
நாடக உத்திகள்
    மேலைநாட்டு நாடக உத்தியான ‘நாடக அங்கதம்’ துன்பியல் நாடகங்களுக்கு இன்றிமையாததாகும். துன்பியல் நாடகமான சிலம்பிலும் இந்நாடக அங்கதம் இடம் பெற்றிருக்கின்றது. சிலம்பின் தொடக்கத்திலேயே ‘காதலர் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல் தீதறுக’ என்று பெண்கள் கூடி ஆடிப்பாடி வாழ்த்தும்போதே பின்னால் அவர்களின் கைகள் நெகிழப்போவதை முன்னுணர்த்தலாக உணரவைக்கிறார்.
     மேலும்ää தற்குறிப்பேற்ற அணியின் மூலமாகவும் பின்வருவனவற்றை முன்னுணர்த்துகிறார். கோவலனும்ää கண்ணகியும் மதுரைக்குள் நுழையும்போதே கருநெடுங்குவளையும்ää ஆம்பலும்ää கமலலும் கண்ணீர் சிந்திக் காலுற நடுங்குகின்றன் போருழந்து கைகாட்ட எனவரும் பகுதிகள் கோவலனுக்கு வர இருக்கும் பேராபத்தையும்ää அதனால் கண்ணகி அடைய இருக்கும் பெரும் துன்பத்தையும் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
முரண்சுவை உத்திகள்
    சிலம்பில் இன்பமும்ää துன்பமும்ää நகையும்ää ääஅவலமும் மாறி மாறி அமைந்து முரண் சுவை விளங்கக்காணலாம். அடைக்கலக் காதையை அடுத்து கொலைக்களக் காதையும்ää நாடுகாண் காதையை அடுத்து காடுகாண் காதையும் அமைத்து முரண்சுவையைக் கூட்டுகிறது.    சிலம்பின் தொடக்கத்தில் மங்களவாழ்த்தாகவும்ää முடிவில் அவலமாகவும் அமைந்து முரண்சுவையைத் தருகிறது.
    அந்திமாலை சிறப்புசெய் காதையில்ää மாலையும் காலையும்ää கூடியவரும் பிரிந்தவரும்ää மகிழ்ச்சியும் அழுகையும்ää மாதவியும் கண்ணகியும் என மாறி மாறி முரண்சுவைப் பாங்கு அமைந்து நாடகப் பண்பிணை பெருக்கின்றது.
மாதவி - நாட்டியக்கலை
      நாட்டியக்கலையினை மாதவி நாட்டிய ஆசிரியரிடம் மட்டும் பயிலவில்லை. இசைää தண்ணுமைää குழல்ää யாழ் போன்ற ஆசிரியர்களிடமும் கலையினைக் கற்றுக்கொண்ட செய்தியைää அவள் அரங்கேறியபோது இசைப்பவர்கள் எந்த இடத்தில் மேடையில் நிற்கவேண்டும் என்பதனைää
        “கூடிய குயிலுவக் கருவிக எல்லாம்
        குழல்வழி நின்றது யாழே யாழ்வழித்
        தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
        பின்வழி நின்றது முழவே முழவொடு
        கூடி நின்று இசைத்தது ஆமந்திரிகை”.
                (புகார்காண்டம்ääஅரங்கேற்றுக்காதைää வரிகள் 139-142)
    கூறப்படுகிறது.
    அரங்கேற்றுக்காதைää இந்திரவிழவு ஊரெடுத்தக் காதைää கடலாடு காதை ஆகியவற்றில் ஆடல் கலையின் நுணுக்கம் மற்றும் வகைகளை வெளிப்படுத்தியுள்ளார். மேலும்ää கடலாடு காதையில் பதினொரு வகையான ஆடல்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை
    கொடுகொட்டி     -    இறைவன் கை கொட்டி ஆடும் ஆடல்
    பாண்டரங்கம்        -    இறைவன் வெண்ணீறு அணிந்து வெளுத்த                             நிறத்துடன் ஆடும் ஆடல்
    அல்லியம்        -    திருமால் கம்சனை வதைக்க ஆடிய ஆடல்
    மல்            -    திருமால் மல்லனை வெல்ல ஆடிய மல்லாடல்
    துடி            -    முருகன் சூரனைக் கொல்லக் கடல் நடுவில்                         ஆடிய துடிக்கூத்து
    குடை            -    அரக்கரை வெல்ல முருகன் ஆடிய                                 குடைக்கூத்து
    குடம்            -    திருமால் அநிருத்தனை விடுவிக்க ஆடிய                             குடக்கூத்து
    பேடு            -    காமன் பெண்மைக் கோலத்தோடு ஆடிய பேடியாடல்
    மரக்கால்        -    கொற்றவை மரக்கால் கொண்டு ஆடிய பாடல்
    பாவை            -    திருமகள் கொல்லிப் பாவையாய் ஆடிய ஆடல்
    கடையம்        -    இந்திராணி ஆடிய கடைசிக்கூத்து
    இப்பதினொருவகை ஆடல்களில்ää புராணக்கருத்துகள் கலந்து இருந்தன என்பதை ஆடல்வகையின் விளக்கங்கள் மூலம் அறியலாம்.
சிலம்பு காட்டும் நாடகம்
    ஆயர்சேரியில் தீய நிமித்தங்கள் தோன்றும் பொழுது    அதனைக்கண்டு அஞ்சிய ஆயர் மகளிர் குல தெய்வமான கண்ணனை வேண்டி குரவைக்கூத்து ஆடிய செய்தியை சிலம்புää

        “ ஆயர்பாடியில் எருமன்றத்து
        மாயவனுடன் தம்முள் ஈடிய   
        வாலசரிதை நாடகங்களில்ää
        வேல்நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
        குரவை ஈடுதும் யாம் என்றாள்”.
                            (ஆய்ச்சியர்குரவை 3;11-15).
    ஆயர்பாடியில் பூந்தாதுகள் நிறைந்த மன்றத்திலேää தம் முன்னோனாகிய பலராமனுடன் கண்ணன் விளையாடிய வாலசரிதை நாடகங்களில்ää வேல்போன்ற நெடுங்கண்களையுடைய பிஞ்ஞைப் பிராட்டியோடு அவன்  ஆடிய குரவைக்கூத்தினை நாமெல்லாரும் இப்போது ஆடுவோம் என மாதரி தன் மகளிடம் கூறியதாக அக்காலத்து நாடகம் பற்றிய செய்தியை இளங்கோ பதிவு செய்துள்ளார்.
    மேலும் குன்றக்குரவையில்ää
        “உரவுநீர் மாகொன்ற வேல் ஏந்தி ஏத்திக்
        குரவை தொடுத்தொன்று பாடுகம் வாää தோழி”.                                    (குன்றக்குரவை 7: 3ää4).
    முருகனைப்போற்றி குரவைக் கூத்தாடிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன.
    வேட்டுவர் வரிப்பாட்டு பாடி மரக்கால் கூத்தாடிய செய்தியைää
        “ ஆங்குத்ää
        துன்று மலர்ப்பிணையல் தொள்மேல் இட்டு ஆங்குää
        அசுரரர் வாடää அமரர்க்கு ஆடிய
        குமரிக் கோலத்துக் கூறுகள் படுமே”.
                                (வேட்டுவவரி 10)
        இளங்கோவடிகள் காட்டுகிறார்.    

முடிவுரை
            “ அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழியää
            மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்
            கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்ää
            மங்கல அணியின் பிறிது அணி மகிழாள்ää
            கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்ää
            திங்கள் வாள்முகம் சிறுவியர்பு இரியச்ää
            செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்ää
            பவள வாள்நுதல் திலகம் இழப்பää
            மைஇருங் கூந்தல் நெய் அணி மறப்பக்ää
            கையறு நெஞ்சத்துக் கண்ணகி அன்றியும்.”.                        முத்தமிழின் சிறப்பு பற்றி அறிய இப்பாடல் தக்க சான்றாகும்.     சாதாரண குடிமக்களை கதைமாந்தர்களாக்கிய சிறப்பு சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளையே சாரும். மக்கள் மத்தியில் வழங்கி வந்த கதையை மூலமாகக் கொண்டு எழுந்த காப்பியம் என்பது கூடுதல் சிறப்பாகும். இளங்கோவடிகள் கதை சொல்லும் நேர்த்தியில் ஒவ்வொரு கதை மாந்தரும் நிறுவப்பட்டு அவர்களின் வாயிலாகவே இயல்ää இசைää நாடகம் என்னும் முத்தமிழ் பற்றிய வரலாற்றினை மிகத்துல்லியமாக அறிந்துகொள்ள முடிகிறது.

No comments:

Post a Comment